கர்நாடக தேர்தலில் அமைச்சர் அசோகா, கனகபுராவில் தோல்வி அடைந்த நிலையில், போட்டியிட்ட மற்றொரு தொகுதியான பத்மநாபநகரில் வெற்றி பெற்றார். வருணா, சாம்ராஜ்நகர் ஆகிய இரு தொகுதிகளிலும் அமைச்சர் சோமண்ணா தோல்வி அடைந்தார். அமைச்ச‌ர்கள் நாகேஷ், சுதாகர், பி.சி.பாட்டீல், எம்.டி.பி.நாகராஜ், ஜே.சி.மாதுசாமி உள்ளிட்ட 11 பாஜக அமைச்சர்கள் படுதோல்வி அடைந்தனர்.
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ஹுப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனால் முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதி பெலகாவியில் வெற்றி பெற்றார்.