சென்னை: சின்னத்திரை நடிகையை காதலித்து திருமனம் செய்துக் கொண்ட அந்த இளம் சீரியல் நடிகர் திடீரென மனைவியை பிரிய காரணமே அவரது சபலம் தான் என பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.
அந்த நடிகையை பார்த்ததும் எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்பதால் நடிகையை நெருங்க பல முறைகளில் முயற்சித்த அந்த நடிகர் திருமணம் ஆகாமல் எதற்குமே அந்த நடிகை இணங்க மாட்டார் என தெரிந்ததும் அவரை காதலிப்பது போல நடிக்க ஆரம்பித்து விட்டாராம்.
நடிகரின் காதல் உண்மையென நம்பி நடிகையும் கழுத்தை நீட்டிய நிலையில், திருமணத்துக்கு பின்னர் நடிகரின் சுயரூபம் தெரிந்ததால் அவரை விட்டு ஒதுங்கியே விட்டார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
காதலித்தது எல்லாம் பொய்யா கோபால்: சீரியல் நடிகையை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு தனது ஆசை எல்லாம் அடங்கியதும் அந்த நடிகையை நைசாக கழட்டி விட அந்த சீரியல் நடிகர் முடிவு செய்து விட்டார் என விவாகரத்து பேச்சுக்களால் சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பான பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
நடிகையை உயிருக்கு உயிராக காதலித்தது எல்லாம் நடிப்பா கோபால் என்றே சின்னத்திரை பிரபலங்கள் அந்த நடிகர் பற்றி ஏகப்பட்ட பேச்சுக்களை பேசத் தொடங்கி உள்ளனர். மேலும், சில நடிகைகள் அந்த நடிகர் எந்தளவுக்கு மோசமானவர் என்பதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் போல ரிவீல் செய்ய ஆரம்பித்துள்ளனராம்.
தோழி மீது கண்: கும்முன்னு மனைவியை திருமணம் செய்துக் கொண்ட அந்த சீரியல் நடிகர் திருமணத்திற்கு வந்ததில் இருந்தே கூட இருந்த நடிகையின் தோழி மீது தனது பார்வையை செலுத்த தொடங்கி விட்டாராம்
நடிகையின் கணவர் தன்னை தப்பாக பார்ப்பதும், தெரியாதது போல கண்ட இடங்களில் உரசுவதுமாக அநாகரிகமான செயல்களை செய்வதை தாங்க முடியாத அந்த தோழி இது பற்றி அந்த நடிகையிடம் சொல்லலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருந்துள்ளாராம்.

கணவரை தூக்கியெறிந்த நடிகை: ஆனால், சில நாட்களிலேயே தனது தோழியிடம் கணவர் நெருக்கமாக பழகுவதும் அவருக்கு மறைமுகமாக டார்ச்சர் கொடுப்பதையும் அந்த நடிகை கண்டு பிடித்து விட்ட நிலையில், பெரும் சண்டையே வெடித்து விட்டதாம்.
தோழி தான் தன்னிடம் தப்பாக நடந்துக் கொண்டார் என நடிகையிடம் கணவர் டிராமா போட்டநிலையில், தனது தோழியை பற்றி தனக்கு தெரியும் உன்னை பத்தித் தான் ஊரே பேசுதே என கேவலமாக திட்டி இதற்கு மேல் உன்னோட வாழவே மாட்டேன் என நடிகை பிரிந்து சென்று விட்டார் என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.