பிரித்தானியாவில் காதலியை கொடூரமாக கொலை செய்து விட்டு, இரண்டு நாட்கள் கழித்து காணவில்லை என பொலிஸில் புகார் கொடுத்த நபரது செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காதலியை கொலை செய்த நபர்
பிரித்தானியாவில் காதலியை கொலை செய்து விட்டு, இரண்டு நாட்கள் கழித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த போது சிசிடீவியில் பதிவான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
@Leicestershire Police
பிரான்க் ஃபரெல் என்ற நபர் சுமிதா மிஸ்டிரி என்ற தனது காதலியை, தலை, முகம் மற்றும் உடல் பகுதியில் கடுமையாக தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
@Leicestershire Police
கடந்த 2021 மார்ச் மாதம் சுமிதாவின் வீட்டில் அவரை கொலை செய்து விட்டு, பின்னர் இரண்டு நாட்கள் கழித்து ஈஸ்டன் ஸ்டீர்ட் காவல் நிலையத்தில் காதலியை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
சிசிடீவியால் சிக்கிய குற்றவாளி
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பெண் கொடூரமாக கொலை செய்யபட்டதை கண்டறிந்துள்ளனர்.
மேலும் பிரான்க் தன் காதலி குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
@Leicestershire Police
இதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திலிருந்த சிசிடீவி கேமராவை பரிசோதித்துள்ளனர். அதில் அந்த நபர் அவரது வீட்டிற்கு வெளியே காரை நிறுத்துவது, வீட்டிற்கு உள்ளே செல்வது போன்றவை பதிவாகியுள்ளன.
இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் பிரான்க்கை, கைது செய்து விசாரணை நடத்திய போது, அவர் தான் கொலையை செய்தார் என அம்பலமாகியுள்ளது.
துஷ்பிரோயக வழக்கு
இந்நிலையில் பொலிஸார் நடத்திய தொடர் விசாரணையில் குற்றவாளி ஏற்கனவே இரண்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்தது தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் கொலைக் குற்றம், மற்றும் இரண்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக அவருக்கு தண்டனையை அதிகப்படுத்தியுள்ளார்.
@Leicestershire Police
மேலும் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 4 பேரை துஷ்பிரயோகம் செய்திருப்பதாகவும், 6 பெண்களை கொடுமையாக தாக்கியிருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றவாளி பிரான்க் ஃப்ரெல்லுக்கு வரும் மே 22ஆம் திகதி நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.