கூகுள் Bard AI vs சாட்ஜிபிடி: எளிமையாக யூஸ் செய்வது எப்படி?

கூகுள் அறிவிப்பு

ஓபன் ஏஐ நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் சாட்ஜிபிடியை களமிறக்கியது. கூகுள் சேர்ச் என்ஜினுக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட சாட்ஜிபிடி மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. மக்கள் தேடும் முடிவுகளுக்கு நொடியில் பல்வேறு தகவல்களை வாரிக் கொண்டு வந்து கொடுத்ததால் சாட்ஜிபிடியை அதிகம் பயன்படுத்த தொடங்கினர். இது கூகுள் நிறுவனத்துக்கு தலைவலியாக மாறியது. உடனடியாக சாட்ஜிபிடிக்கு போட்டியாக அதேபோன்றதொரு தொழில்நுட்பத்தை உருவாக்க குழு அமைத்தது கூகுள். இது குறித்து அப்போது பேசிய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனமும் கூகுள் பார்ட் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஆனால் எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

கூகுள் Bard பயன்படுத்துவது எப்படி?

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூகுள் I/O-வில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவிப்புகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டது. மொத்தம் 25 அறிவிப்புகள் அதில் வெளியிடப்பட்டன. அதில் ஒரு அறிவிப்பு தான் கூகுள் பார்ட். இந்தியா உள்ளிட்ட 180க்கும் அதிகமான நாடுகளில் களமிறக்கப்பட்டிருக்கும் கூகுள் பார்ட்-ஐ கூகுளின் சேர்ச் பாக்ஸில் சென்று bard.google.com என டைப் செய்தால் அந்த பக்கம் ஓபன் ஆகும். அதில் Try Bard ஆப்ஷனைக் க்ளிக் செய்து அதன் பிரைவசி பாலிசியை ஏற்க வேண்டும். அதன்பின், பார்ட்-ஐப் பயன்படுத்தலாம். மேலும், சாட்பாட்டை ஆராயவும் செய்யலாம். 

என்னென்ன மொழிகளில் பயன்படுத்தலாம்

pic.twitter.com/My6VIBARUg

— Google (@Google) May 10, 2023

கூகுள் பார்ட்-ஐ யூசர்கள் பல்வேறு மொழிகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும். சாட்ஜிபிடியில் இதற்கான வாய்ப்பு மிக குறைவாக இருக்கிறது. மேலும், இணைய வசதி மற்றும் லேட்டஸ்ட் தகவல்கள் இதில் இடம்பெறாது. ஆனால், கூகுள் பார்ட் இப்போதைய தகவல்கள் வரை அனைத்தையும் கொடுக்கும். அந்தளவுக்கு மேம்படுத்தப்பட்ட அம்சமாக வந்திருப்பதால் சாட்ஜிபிடி வாடிக்கையாளர்கள் கூகுள் பார்ட் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இது சாட்ஜிபிடிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. 

Google Bard சிறப்பு அம்சங்கள் என்ன? 

Google I/O நிகழ்வானது, Google Bard குறித்த அம்சங்களை வெளியிட்டது. அதன் முக்கிய அம்சமாக, பார்ட் பார்வையாளர்களுக்குத் தேவையான பதில்களை Visual ஆக காட்டுவதில் அதிக கவனம் செலுத்துகிறது. மேலும், Bard-இடம் நாம் கேட்கும் கேள்விகளுக்குக் கூடுதல் பதிலில் படங்களை AI Chatbot சேர்த்து வாடிக்கையாளர்களுக்குக் காட்டும். மேலும், படங்களை வைத்து தேடல் செய்யும் அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளது. இது, கூகுள் லென்ஸை பார்டுடன் இணைக்கும் போது செய்யப்படும். இது தவிர, Bard Talks, Drive, Gmail, Maps மற்றும் இன்னும் பிற Google பயன்பாடுகள் தரப்படுகிறது. மேலும், Adobe Firefly உடன் இணைந்து AI Chatbot செயல்பட்டு, படங்களைத் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்தப் படங்களில் திருத்தம் செய்ய முடியும். மேலும், வடிவமைப்புகளில் சேர்க்க முடியும். அதன் படி, Bard ஆனது ஒரு போதும் சாத்தியமில்லாத விஷயங்களைச் செய்ய அனுமதிக்கும் கருவியாகச் செயல்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.