திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய எவ்வளவு நேரம் ஆகிறது? ஏழுமையான் பக்தர்கள் ஏமாற்றம்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் பக்தர்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தின் மத்தியில் இருந்தே கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை காரணமாக பலரும் திருப்பதிக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். இதற்காக ஒவ்வொரு மாதத்திற்கும் முன்பாக தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் டிக்கெட்களுக்காக பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

​திருப்பதியில் சாமி தரிசனம்அந்த வகையில் மே மாதத்திற்கான டிக்கெட்கள் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன. எனவே ஆன்லைனில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்கள் கிடைக்காதவர்கள், நேரில் சென்று இலவச டோக்கன்கள் மூலம் தரிசிக்க திட்டமிட்டனர். இந்த கூட்டம் தான் மிகவும் அதிகம். ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திருமலைக்கு வந்து செல்வதை பார்க்க முடிகிறது.
​பக்தர்கள் காத்திருப்புஇதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanams) ஏற்பாடு செய்திருந்தது. தற்போது எந்தவித சிக்கலும் இன்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் ஏழுமலையானை தரிசிக்க 10 மணி நேரம் வரை மட்டுமே ஆனது.
​திருப்பதி தரிசனமா… போலி டிக்கெட்டை எப்படி கண்டறிவது? OTPல தான் விஷயமே இருக்கு!​
மோக்கா புயல் எதிரொலிஏனெனில் வங்கக்கடலில் உருவான மோக்கா புயலின் தாக்கத்தால் திருமலையில் மழை பெய்தது. இது சிரமத்தை ஏற்படுத்தியதால் பக்தர்கள் பலரும் தங்களது பயணத்தை ஒத்திவைத்தனர். இதன் விளைவாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்து சாமி தரிசனம் விரைவாக நடைபெற வழிவகுத்தது. தற்போது புயல் வங்கதேசம் – மியான்மர் இடையே சென்று கொண்டிருக்கிறது.
​திருமலையில் இயல்பு நிலைஇன்று நண்பகலில் அதி தீவிர புயலாக மோக்கா கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. திருமலையில் இயல்பு நிலை திரும்பியதால் மீண்டும் பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரத்திற்கு மேல் ஆவதாக தேவஸ்தானமும், பக்தர்களும் கூறுகின்றனர்.
உண்டியல் வசூல்கிட்டதட்ட 30 இடங்களில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குடோன்களில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேவஸ்தானம் கடைசியாக வெள்ளி (மே 12) அன்று பக்தர்கள் வருகை நிலவரம் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, 71 ஆயிரத்து 763 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 35 ஆயிரத்து 399 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். அந்த நாளில் மட்டும் 3.19 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது.
​திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்… க்யூ செம ஸ்பீடு… தரிசனம் ரொம்ப ஈஸியாம்!​
சுத்த திருமலா – சுந்தர திருமலாஇதற்கிடையில் திருமலையில் உள்ள தெருக்கள், மாட வீதிகள், பக்தர்கள் நடைபாதை ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணிகளில் தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் பெரிய அளவில் தூய்மை பணிகள் நடைபெறும். இது வழக்கமாக நடைபெறும் பணிகளில் இருந்து சற்றே மாறுபட்டது. இதற்கு ’சுத்த திருமலா – சுந்தர திருமலா’ என்று பெயரும் வைத்துள்ளனர். இதில் தன்னார்வலர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.