2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக மாணவரணி செயலாளர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் அருகே ஒட்டநாச்சியார்குடி என்ற பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மக்கள் இயக்க வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட மாணவர் அணி தலைமை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்டத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட விஜய் நற்பணி மன்ற பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஜூன் மாதம் 22-ம் தேதி விஜய் பிறந்தநாள் அன்று ரத்ததான முகாம், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், விவசாய பயன்பாட்டிற்கு உரிய கருவிகள் வழங்கப்படும் எனவும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த விஜய் இயக்க மாணவர் அணி மாவட்டச் செயலாளர் ஆனந்த், அடுத்த மாதம் சென்னையில் பெரிய அளவில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கூட்டம் நடைபெறும் என சொல்லப்படுகிறது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் தொகுதி வாரியாக அரசியல் நிலவரம் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என கூறி இருக்கிறார்கள். அதனை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். இந்த மாத இறுதிக்குள் அனுப்ப சொல்லி இருக்கிறார்கள்.
அடுத்த 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் யார் வேட்பாளராக நிற்க வேண்டும் என விருப்பப்படுபவர்கள் பெயரை கூறுங்கள். மற்றதை விஜய் முடிவெடுப்பார் என விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என விஜய் ரசிகர் மன்ற மாணவர் அணி தலைவர் ஆனந்த் தெரிவித்தார்
newstm.in