அன்னையர் தினத்தையொட்டி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது தாய் மற்றும் மனைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அன்னையர் தினம்
மே 14ஆம் திகதி உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பலரும் தங்கள் தாய்க்கு வாழ்த்துக்களையும், மரியாதையையும் அளிப்பர்.
அந்த வகையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தாய் மற்றும் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
ட்ரூடோவின் வாழ்த்து
அவரது பதிவில், ‘அனைத்து தாய்மார்களுக்கும்: இந்த நாளை உங்கள் அன்புக்குரியவர்களுடன் செலவிட முடியும் என்று நம்புகிறேன்.
என் சொந்த தாய் மற்றும் சோஃபிக்கு: நீங்கள் இருவரும் வலிமையான, தைரியமான மற்றும் அற்புதமான மனிதர்கள்.
குழந்தைகளும், நானும் உங்களை மிகவும் நேசிக்கிறோம். அன்னையர் தின வாழ்த்துக்கள்!’ என தெரிவித்துள்ளார்.
À toutes les mères : j’espère que vous pourrez passer cette journée avec vos proches. À ma propre mère et à Sophie : vous êtes deux des personnes les plus fortes, les plus courageuses et les plus formidables qui soient. Les enfants et moi vous aimons beaucoup. Bonne fête des… pic.twitter.com/dX0dRmnJM8
— Justin Trudeau (@JustinTrudeau) May 14, 2023