பிரபல யூடியூபர் இர்ஃபான்க்குத் திருமணம்; வைரலாகும் புகைப்படங்கள்!

சமூகவலைதள பக்கங்களில் பிரபலமானவர் யூடியூபர் இர்ஃபான். ஃபுட் பிளாகர் ஆக அறிமுகமானவர் இன்று முன்னணி யூடியூபராக இருக்கிறார். இன்று அவருக்கு நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

`உணவு பிடிக்கும் என்கிற காரணத்தினால் சாப்பிடுகிற சாப்பாட்டை ஏன் நாம ரிவ்யூ பண்ணக் கூடாது’ எனத் தோன்றிய ஐடியாவை வைத்து 2018-ல் யூடியூப் தொடங்கியவர் இன்று வரையிலும் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார். தன்னுடைய ஃபாலோயர்ஸூக்கு என்ன தேவை என்பதை யூகித்து வெரைட்டியான வீடியோக்களைக் கொடுத்துவருகிறார். மத ரீதியான பிரச்னைகள் வந்த போதும் விடாமல் தன் மனதுக்கு சரி எனப்படும் விஷயங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

இர்பான் தன் மனைவியுடன்

சமீபமாக இன்ஃபுளூயன்ஸர் என்கிற வார்த்தைதான் ட்ரெண்ட். இன்ஃபுளூயன்ஸராகவும் சினிமா புரொமோஷன்களுக்காக நடிகர், நடிகைகளுடன் சாப்பிட்ட படியே உரையாடும் அவரது வீடியோக்களும் டிரெண்ட்டிங்கிலும் தவறாமல் இடம் பெற்றிருக்கின்றன. இந்நிலையில், யூடியூபராக இர்ஃபான் நமக்கு அளித்த பேட்டியில் என்னுடைய புரொபஷனை புரிந்து கொண்டு எனக்கு சப்போர்ட் ஆக இருக்கும் வாழ்க்கைத் துணையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று இர்ஃபானுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. `மிஸஸ் இர்ஃபான்’ எனக் குறிப்பிட்டு திருமண புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்தத் திருமண நிகழ்ச்சிக்காக இர்ஃபான் குடும்பத்துடன் நேரில் சென்று ஆளுநர் ரவியையும், நடிகர் கமல்ஹாசனையும் அழைத்திருந்தார். அந்தப் புகைப்படங்கள் சமூகவலைதள பக்கங்களில் வைரலானது. அவருடைய ஹல்தி (Haldi) விழாவில் பல யூடியூபர்களும், நடிகர் கவினும் கலந்துகொண்ட புகைப்படங்களும் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டன.

சீக்கிரமே அவருடைய மனைவி குறித்து இர்ஃபான் பிரத்யேகமாக அவருடைய பாலோயர்ஸூக்கு அறிவிப்பார் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

வாழ்த்துகள் இர்ஃபான் – மிஸஸ் இர்ஃபான்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.