ப்ளீஸ் தொல்லை பண்ணாதீங்க..உங்களுக்கு விளக்கம் கொடுப்பது என் வேலை இல்லை.. டென்ஷனான நடிகை சம்யுக்தா!

சென்னை : சீரியல் நடிகை சம்யுக்தா உங்களுக்கு விளக்கம் கொடுப்பது என் வேலை இல்லை என்று கோபத்துடன் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், விவாகரத்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இருவரும் இன்ஸ்டாகிராமில் இருந்து தங்களது திருமண புகைப்படத்தை நீக்கியதால் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

காதல் திருமணம் : விஜய் டிவியில் பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து ஆகிய சீரியல்களில் நடித்தவர் நடிகை சம்யுக்தா. அவர் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து வந்தார். இதையடுத்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த மார்ச் திருமணம் நடந்தது. இவர்களின் திருமணத்தில் பல சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

போட்டோக்களை நீக்கினர் : இவர்களுக்கு திருமணம் ஆகி, ஒரு மாதமே ஆன நிலையில், இன்ஸ்டாகிராமில் இருந்து திடீர் என தங்களின் திருமண புகைப்படங்களை இருவருமே நீக்கிவிட்டனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவர்கள் விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து,விஷ்ணுகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த மௌனம் வெறுமையானதல்ல, உண்மை மற்றும் பதில் நிறைந்தது என்று பதிவிட்டிருந்தார்.

நான் ஏமாந்துவிட்டேன் : இதையடுத்து,விவாகரத்து முடிவுக்கு காரணம் குறித்து பேசிஉள்ளார்.அதில், விஷ்ணுகாந்த்தை நம்பி நான் ஏமாந்துவிட்டேன், அவருக்கும் எனக்கும் 10 வருஷம் வித்தியாசம் எனவும் தெரிவித்துள்ளார். இப்படி இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டு குடும்பசண்டையை வீதிக்கு கொண்டு வந்துள்ளளனர்.

A video posted by Samyuktha who did not want to explain about the divorce

ப்ளீஸ் தொல்லை பண்ணாதீங்க : இந்நிலையில், நடிகை சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், யூடியூபர்ஸ் தயவு செய்து இன்டர்வியூ கேட்டு தொல்லை பண்ணாதீங்க, தினமும் நூறு போன் வருது, நான் எந்த போனையும் எடுக்கமாட்டேன். அதேபோல, நான் சரி என்று, யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று அந்த வீடியோவில் கோபத்துடன் பேசி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.