16 வயதை எட்டாத உக்ரேனிய சிறுமி மற்றும் 64 வயது நபர் என இருவரை ரஷ்ய துருப்புகள் கொன்றுவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
போப் பிரான்சிஸிடம் கோரிக்கை
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் பிரதமர், ஜனாதிபதி மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அப்போது நாடு கடத்தப்பட்ட உக்ரேனிய சிறுமிகள் வீடு திரும்ப முயற்சிக்க வேண்டும் என்றும், ரஷ்ய குற்றங்களை கண்டிக்குமாறும் போப் பிரான்சிஸிடம் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார்.
ரஷ்ய துருப்புகள் மீது குற்றச்சாட்டு
இந்த நிலையில் ரஷ்ய துருப்புகள் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்து, ரஷ்ய பயங்கரவாதத்தை நிறுத்துவோம் என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது பதிவில்,
‘இன்று ரஷ்ய பயங்கரவாதிகள் மற்றொரு உக்ரேனிய குழந்தையின் உயிரை – இன்னும் 16 வயதை எட்டாத ஒரு சிறுமியின் உயிரைக் கொன்றனர்.
அவள் பெயர் நாடியா..ஒரு ஆணும் இறந்தார், அவருக்கு 64 வயது. டான்பாஸில் உள்ள கோஸ்டியன்டினிவ்கா என்ற சாதாரண நகரைச் சேர்ந்த சாதாரண மக்கள் அவர்கள்’ என தெரிவித்துள்ளார்.
Today, 🇷🇺 terrorists took the life of another 🇺🇦 child – a girl, who has not yet turned 16. Her name was Nadia… A man also died, he was 64 years old. Just ordinary people from the ordinary town of Kostiantynivka in Donbas. It was a 🇷🇺 rocket artillery strike. Simply on the… pic.twitter.com/v7pMCm5zXL
— Володимир Зеленський (@ZelenskyyUa) May 13, 2023