வங்கதேசம் – மியான்மர் இடையேயான கடற்கரை பகுதிகளை அதி தீவிர புயலான மோக்கா., பேரிரைச்சலுடன் கூடிய பலத்த சூறாவளிக் காற்றுடன் கரை கடந்த நிலையில், சுமார் 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் புயல் கரையை கடந்த போது சுமார் 215 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், மடங்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில், சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
புயல் காரணமாக மியான்மரின் சிட்வே பகுதியில் வெள்ள நீரில் குப்பைகள் அடித்து வரப்பட்டன. மின்சாரம் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன