வருடத்திற்கு ஒரு மெகா வெற்றிப்படம் ; சந்தோசத்தில் நரேன்

தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மலையாள நடிகர் நரேன். அதைத்தொடர்ந்து அஞ்சாதே, முகமூடி, கத்துக்குட்டி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் மலையாளத்திலும் பிசியான நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி, விக்ரம் ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் முன்பை விட தற்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார் நரேன்.

இந்த நிலையில் தற்போது கேரளாவில் கடந்த வாரம் 2018 என்கிற படம் வெளியானது. ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் வெளியான ஏழு நாட்கலிலேயே உலகம் முழுக்க கிட்டத்தட்ட 70 கோடி வசூலை நெருங்கியுள்ளது. கடந்த 2018ல் கேரளாவையே உலுக்கிய பெருமழை வெள்ள பாதிப்பையும் அதில் உயிரை பணயம் வைத்து நடைபெற்ற மீட்பு பணிகளையும் குறித்து இந்த படம் உருவாகி உள்ளது.

இதில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்திருந்தாலும் மிக முக்கியமான வேடங்களில் நடிகர் நரேன், குஞ்சாக்கோ போபன், வினித் சீனிவாசன் ஆகியோரும் நடித்துள்ளனர். குறிப்பாக இதில் நரேனினின் கதாபாத்திர என்ட்ரி மற்றும் அவரது நடிப்பு ஆகியவற்றிற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. கடந்த வருடம் தமிழில் வெளியான விக்ரம், இருந்த வருடம் 2018 என வருடத்திற்கு ஒரு மெகா ஹிட் படம் தனக்கு பெயர் சொல்லும்படி அமைந்துவிட்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் நரேன்..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.