சென்னை : நான்கு பேரை காதலித்தேன் அவர்களை இன்னும் மறக்கவில்லை என்று பாரதிராஜா ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா நீண்ட இடைவேளைக்கு பிறகு மார்டன் லவ் என்ற அந்தாலாஜி படத்தை இயக்கி உள்ளார்.
இந்தஆந்தாலாஜி தொடர் வருகிற மே 18-ந் தேதி அமேசான் பிரைமில் வௌயாக உள்ளது.
மார்டன் லவ் : ஆறு அத்தியாயங்களை கொண்ட ஆந்தாலஜி படத்தில், ‘லாலா குண்டா பொம்மைகள்’தொடரை ராஜு முருகன் இயக்கி உள்ளார். இரண்டாவது அத்தியத்யாயமான ‘இமைகள்’ என்கிற தொடரை பாலாஜி சக்திவேல் இயக்கி உள்ளார். மூன்றாவது அத்தியாயமான ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ யை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி இருக்கிறார்.
6 தொடர்கள் : நான்காவது அத்தியாயமான ‘மார்கழி’என்கிற தொடரை அக்ஷய் சுந்தர் இயக்கி உள்ளார். ஐந்தாவது அத்தியாயமான ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ என்பதை பாரதிராஜா இயக்கி இருக்கிறார். ஆறாவது அத்தியாயமான ‘நினைவோ ஒரு பறவை’ என்பதை தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். இந்த ஆந்தாலஜி வெப் தொடருக்கு ஜிவி பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன், இளையராஜா ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
டிரைலர் வெளியீட்டு விழா : மாடர்ன் லவ் ஆந்தலாஜி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இதில் பேசிய பாரதிராஜா, வழக்கம் போல தனது பாணியில் என்இனிய தமிழ் மக்களே என பேசத் தொடங்கினார். இந்தப்படம் எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. இந்தபடம் வழக்கமான சினிமாவிலிருந்து தனித்து நிற்கிறது. தியாகராஜா வித்தியாசமான மனிதர். அவரிடமிருந்து நிறைய கற்றுகொள்ள வேண்டும்.
நான்கு பேரை காதலித்தேன் : ஆளைப்பார்த்தால் காதில் கம்பல் போட்டுக்கிட்டு இருக்காரே என்னையா மனுஷன் என நினைத்தேன். ஆனால்,ஆரவாரமில்லாமல் அழகாக ஒரு காதல் கதையை சொல்ல வேண்டும் என்பதை இவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். நான் காதல் செய்யவில்லை என்றால் கலைஞனாகியிருக்க முடியாது. எவன் ஒருவன் காதலை அழகாக சொல்கிறானோ அவன் தான் உண்மையான கலைஞன்.
காதலியை மறக்கமாட்டேன் : நான் 84 வயதிலும் காதலிக்கிறேன் என்பதை தைரியமாகச் சொல்வேன். என்னைப் பொறுத்தவரை காதல் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை. நான் ஒன்பதாவது படிக்கும்போது அப்படி எனக்கு ஒரு காதலி இருந்தாள். பின், சென்னை வந்து இத்தனை ஆண்டுகளில் இதுவரை நான்கு காதல்களைக் கடந்துவிட்டேன். ஆனால், அவர்களை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. எனக்கு நிழல் தந்த குடைகளை என்னால் என்றும் மறக்க முடியாது அவர்கள் பெரிய இலக்கியம் என்றார்.