மிலினில் நடைபெற்ற பேஷன் ஷோவில், 50000க்கும் அதிகமான படிகங்களுடன் தயாரிக்கப்பட்ட, திருமண ஆடை உலக சாதனை படைத்துள்ளது.
ஸ்வரோவஸ்கி படிகங்கள்
மிலனில் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி நடைபெற்ற ஒரு பேஷன் ஷோவில், 50,890 ஸ்வரோவஸ்கி படிகங்கள் கொண்ட ஆடை அறிமுகப்படுத்தப்பட்டது.
@gettyimages
இந்த ஆடை இத்தாலியில் பிரபல திருமண ஆடை தயாரிக்கும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக அதன் மேல்சட்டையில் ஆயிரக்கணக்கான படிகங்கள் தைக்கப்பட்டுள்ளன.
@ginnese record.com
இதை தைப்பதற்காக மட்டும் 200 மணி நேரம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் சாதனை
இதற்கு முன்பு இஸ்தான்புல்லியில் 45 ஆயிரம் படிகங்களுடன், ஒரு ஆடையை துருக்கி நிறுவனம் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தற்போது இந்த ஆடை பழைய கின்னஸ் சாதனைகளை முறியடித்துள்ளது.
@ginnese record.com
இந்த உடையை உருவாக்க பல மாதங்கள் அந்நிறுவனத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. கடையின் இணை நிறுவனர் மைக்கேலா ஃபெரிரோ, கருத்தைச் செயல்படுத்துவதற்கான சிறந்த பொருட்களை ஆராய்ச்சி செய்த பிறகு உருவாக்கத்தை வடிவமைத்துள்ளார்.
மேலும் அவர்களது பகுதியில் தொழில் வல்லுநர்களாக இருந்த தையல்காரர்கள் குழுவுடன், ஒத்துழைத்த பிறகு இந்த ஆடை கூடுதல் சிரத்தை எடுத்து தயாரிக்கப்பட்டுள்ளது.
New record: Most crystals on a wedding dress – 50,890 achieved by Michela Ferriero (Italy) 💎
It took over 200 hours to individually sew each Swarovsky diamond onto this amazing dress 😱 pic.twitter.com/LXys3lfp5l
— Guinness World Records (@GWR) May 10, 2023
இதன் ரவிக்கை மட்டும் ஆயிரக்கணக்கான படிகங்களை தைக்க வேண்டும் என்பதற்காக, ஆடையின் அடித்தளத்தை உருவாக்க கூடுதல் கவனம் எடுக்கப்பட்டதென கின்னஸ் சாதனை படைத்த மைக்கேலா ஃபெரிரோ கூறியுள்ளார்.