சென்னை : விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக பாக்கியலட்சுமி தொடர் காணப்படுகிறது.இந்தத் தொடரின் முன்னணி கேரக்டர்களாக கோபி, பாக்கியா, ராதிகா உள்ளிட்டவர்கள் காணப்படுகின்றனர். இவர்களை சுற்றியே கதையின் மற்ற கேரக்டர்களும் காட்டப்படுகின்றனர். இவர்களை சுற்றியே கதைக்களமும் காணப்படுகிறது.
கோபி மற்றும் பாக்கியா இடையில் விவாகரத்து நிகழ, தொடர்ந்து தான் விரும்பியபடியே ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்கிறார் கோபி.
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை எதிர்பார்த்து கோபி இரண்டாவது திருமணத்தை செய்த நிலையில், அவருடைய நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.
பாக்கியா மீது கோபிக்கு காதல் தொடர்கிறதா? : விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மையான தொடராக பாக்கியலட்சுமி உள்ளது. சேனலின் டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த் தொடர் முன்னிலையில் உள்ளது. இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா என மூன்று கேரக்டர்களையும் அவர்களையொட்டி மற்ற கேரக்டர்களையும் வைத்து இந்தத் தொடரில் அடுததடுத்த எபிசோட்களை ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் வயதுக்கு மீறிய காதலால், தன்னுடைய மனைவி பாக்கியாவை ஏமாற்றி அவரிடம் விவாகரத்து பெற முயல்கிறார் கோபி.
ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து பாக்கியாவே, கோபி கேட்கும் விவாகரத்தை கொடுக்கிறார். மேலும் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார். தொடர்ந்து தான் விரும்பியபடி, ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்கிறார் கோபி. இதையடுத்து தான் விரும்பியபடி தன்னுடைய வாழ்க்கை இனிமையாக அமையும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அவர் விருப்பத்திற்கு மாறாக, ராதிகாவின் அதிகப்படியான செலவு, தன்னுடைய முதல் குடும்பத்தினருடன் ஏற்படும் பிரச்சினைகள் என அவரது வாழ்க்கை மிகவும் சிக்கலாக மாறுகிறது.
ஒருகட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் கோபி, ஒருநாள் இரவு தன்னுடைய அப்பா வீட்டில் தங்க நேர்கிறது. இதையடுத்து ராதிகாவும் அவருடைய வீட்டிற்கு வருகிறார். தன்னுடைய கணவன் வீட்டில் தான் தங்குவதற்கு உரிமை உள்ளது என்ற அவர் கூறும் நிலையில், அவரது வருகை குடும்பத்தினருக்கு கடுப்பை ஏற்படுத்துகிறது. கோபியின் அம்மா ஈஸ்வரி, தொடர்ந்து ராதிகாவை திட்டிக் கொண்டே இருக்கிறார். இதனால் கடுப்பாகும் ராதிகா, கோபியிடம் புகார் கூறுகிறார்.
இதனிடையே, தன்னுடைய மனைவியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத கோபி, அவர் பழனிச்சாமியிடம் சிரித்து பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அவரது நடத்தையை சந்தேகிக்கும் வகையில் குடும்பத்தினரிடம் பேசுகிறார். இதனால் கோபத்திற்கு உள்ளாகும் எதிழ் மற்றும் செழியன் இருவரும் அவரை அடிக்க பாய்கின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார் கோபி. தன்னுடைய மகன் செழியன் தன்மீது மிகுந்த பாசத்துடன் இருந்த நிலையில், தற்போது தன்னை அடிக்க கைத்தூக்கியது அவருக்கு கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து அவர் ராதிகாவிடம் புலம்ப, அவர் பதிலுக்கு பாக்கியா யாரிடம் பேசினால் கோபிக்கு என்ன என்றும், இன்னமும் பாக்கியா மீது அவருக்கு காதல் தொடர்கிறதா என்றும் கேள்வி எழுப்புகிறார். இந்தக் கேள்வியால் அதிர்ச்சியடையும் கோபி, இதை மறுக்கிறார். தொடர்ந்து, பாக்கியா குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் ஏமாற்றி வருவதாகவும் அவரது முகத்திரையை குடும்பத்தில் உள்ளவர்கள் அறியும்படியாகவே தான் இப்படி பேசியதாகவும் அவர் கூறுகிறார்.