Breaking: உதயச்சந்திரன் ஐஏஎஸ் நிதித்துறைக்கு மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு.!

14 ஐஏஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி ஜோதி நிர்மலா பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு

இது குறித்து வெளியிடப்பட்ட அரசானையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘‘நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், முதல்வர் முக ஸ்டாலினின் முதன்மைச் செயலாளாராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மேம்பாட்டு ஆணையராகவும் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயச்சந்திரன் ஐஏஎஸ், நிதித்துறை முதன்மைச் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலாளராக பணியாற்றி வந்த அமுதா ஐஏஎஸ், உள்துறை செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார். அதேபோல் உள்துறை செயலாளராக இருந்த பனிந்தர ரெட்டி ஐஏஎஸ், போக்குவரத்துத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்படுகிறார்.

அதேபோல் போக்குவரத்துத் துறை செயலாளராக இருந்த கோபால் ஐஏஎஸ், லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார். மேலும் சிவதாஸ் மீனா ஐஏஎஸ் இந்த ஆணையர் பொறுப்பை கூடுதலாக வகித்து வந்தது குறிப்பிடதக்கது.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ககன் தீப் சிங்பேடி ஐஏஎஸ், சுகாதரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்படுகிறார். சுகாதரத்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார் ஐஏஎஸ், ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

அதேபோல் பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த மணிவாசன் ஐஏஎஸ், சுற்றுலா, கலை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கலை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக iருந்த சந்திர மோகன் ஐஏஎஸ், பொதுப்பணித்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.

மறுவாழ்வுத்துறை செயலாளராக இருந்த ஜெகன்நாதன் ஐஏஎஸ், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

பள்ளிக்கல்வித்துறை ஆணையராக இருந்த நந்தக்குமார் ஐஏஎஸ், மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார். அதேபோல் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக இருந்த மைதிலி ராஜேந்திரன் ஐஏஎஸ் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் ஆணையராக நியமினம் செய்யப்படுகிறார். இந்திய மருத்துவம் ஹோமியோபதியின் ஆணையராக இருந்த கணேஷ் ஐஏஎஸ், புள்ளியில் துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்’’ என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.