புதுடில்லி:உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை தரும் வகையில், 928 ராணுவ தளவாடம், ஆயுதங்களுக்கான உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டுஉள்ளது.
தற்சார்பு நிலையை எட்டும் வகையிலும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும், ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்து வருகிறது.
இதன்படி, இதுவரை மூன்று முறை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பொருள்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
தற்போது நான்காவது பட்டியலை ராணுவ அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில், ராணுவ ஆயுதங்கள், தளவாடங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் உட்பட, 928 பொருள்கள் இடம்பெற்றுள்ளன.அடுத்த ஐந்து ஆண்டுக்குள் படிப்படியாக இது அமல்படுத்தப்படும்.
ஏற்கனவே, 2,500க்கும் மேற்பட்ட பொருள்கள், ஆயுதங்கள் இறக்குமதி நிறுத்தப்பட்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இதைத் தவிர, தடைப் பட்டியலில், 1,238 பொருள்கள் இடம் பெற்றுள்ளன. இதில், 310 பொருள்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருவதாக, ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement