Hero Motocorp – புதிய பிரீமியம் பைக்குகள், ஹார்லி பைக் அறிமுகத்தை உறுதி செய்த ஹீரோ மோட்டோகார்ப்

FY2024 ஆம் நிதியாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் வரலாற்றில் இல்லாத வகையில் அதிக பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ள நிலையில்  பிரீமியம் பைக்குகள் மற்றும் ஹார்லி-டேவிட்சன் HD 4xx பைக் என பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக புதிய தலைமை செயல் அதிகாரி நிரஞ்சன் குப்தா உறுதி செய்துள்ளார்.

நமது ஆட்டோமொபைல் தமிழனில் பிரத்தியேகமாக ஹீரோ பேஷன் பிளஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200S 4V பைக் அறிமுகம் குறித்தான முக்கிய தகவலை வெளியிட்டிருந்தோம். மேலும் 8க்கு மேற்பட்ட மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதை குறிப்பிட்டிருந்தோம்.

New Hero Motocorp Bikes

இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப், நடப்பு நிதியாண்டில் ஹீரோ-ஹார்லி டேவிட்சன் கூட்டணியின் கீழ் முதல் பைக் மாடல் உட்பட புதிய பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம் பட்ஜெட் பைக் பிரிவில் (100-110cc) முன்னணியில் உள்ள நிலையில் 125cc சந்தையில் பங்களிப்பை அதிகரிக்கவும், 160cc மற்றும் அதற்கும் மேலான பிரிவுகளில் அதிக அளவிலான மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் நாங்கள் பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவோம். இந்த நிதியாண்டில், ஹீரோ பைக் வரலாற்றில் இதுவரை கண்டிராத அதிகபட்ச வெளியீடுகளைக் காண்போம். குறிப்பாக, 150cc மற்றும் 450cc வரையிலான பிரிவில் பிரிமியம் பைக்குகளில் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு 2023 ஆம் ஆண்டில் 100 நகரங்களை உள்ளடக்கி நாடு முழுவதும் தனது மின்சார பிராண்டான VIDA எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிடுவதற்கான திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் தற்போது ஒட்டுமொத்த இந்திய மோட்டார் சைக்கிள் பிரிவில் சுமார் 51 சதவீத சந்தை பங்கைக் கொண்டுள்ளது. வரவிருக்கும் புதிய மாடல்கள் பேஸன் பிளஸ், எக்ஸ்ட்ரீம் 200S 4V, எக்ஸ்ட்ரீம் 160R 4V, எக்ஸ்ட்ரீம் 200R 4V, ஹீரோ எக்ஸ்பல்ஸ் 400, ஜூம் 125 ஸ்கூட்டர், மற்றும் ஹார்லி HD 4XX ஆகும்.

மேலும் படிக்க – 8 பைக் மாடல்களை வெளியிடும் ஹீரோ பட்டியல்

inputs from PTI

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.