இந்திய சந்தையில் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட திட்டமிட்டுள்ள ஹோண்டா ஐரோப்பாவில் தனது முதல் EM1 e பேட்டரி மின்சார ஸ்கூட்டரை ஸ்வாப் நுட்பத்துடன் 48Km/Charge (WMTC) ரேஞ்சு கொண்டதாக அறிமுகம் செய்துள்ளது.
பேட்டரி ஸ்வாப் நுட்பத்தை தனது மற்றொரு நிறுவனமான ஹோண்டா மொபைல் பவர் பேக் (Honda Mobile Power Pack) மூலம் மேற்கொள்ளுகின்றது. ‘EM’ என்பதன் விரிவாக்கம் Electric Moped ஆகும்.
Honda EM1 e scooter
ஹோண்டா வெளியிட்டுள்ள புதிய EM1 e மெலிதான வடிவமைப்பினை கொண்டு மிக நேர்த்தியான நவீனத்துவத்தை பெற்றதாக அமைந்துள்ளது. கூடுதலாக இடம்பெற்றுள்ள 12V பேட்டரி ஸ்கூட்டரின் மற்ற அமைப்புகளை செயல்படுத்த உதவுகின்றது. அனைத்து விளக்குகளும் எல்இடி ஆக வழங்கப்பட்டு டிஜிட்டல் கிளஸ்ட்டரில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு, மீதமுள்ள பேட்டரி இருப்பு உட்பட முக்கியமான அனைத்து தகவல்களையும் காட்டுகிறது.
இருவர் அமர்ந்து செல்லும் வகையிலான வடிவமைப்பினை பெற்று மிக நேர்த்தியாக இருக்கைக்கு அடியில் பேட்டரி வழங்கப்பட்டு, 3.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் வழங்குகின்றது.
EM1 e மொபெட்டில் உள்ள இன் வீல் மோட்டார் தொடர்ந்து 0.58kW பவர் மற்றும் அதிகபட்ச பவர் 1.7kW வரை வெளிப்படுத்தும். இந்த மாடலில் உள்ள ECON மோடில் பவர் வெளியீடு 0.86kW ஆக இருக்கும்.
EM1 e மாடல் 75 கிலோ எடையுடன் 10 டிகிரி கோணத்தில் ஏற முடியும். ECON மோடில் த்ரோட்டில் செயல்பாட்டை மென்மையாக்குகிறது மற்றும் அதிகபட்ச வேகத்தை குறைத்து சுமார் 48Km வரை பயணிக்க உதவுகின்றது. இந்த ஸ்கூட்டரி அதிகபட்ச வேகம் 45Km/h ஆகும்.
எலெக்ட்ரிக் இன்-வீல் மோட்டார் மற்றும் ஹோண்டாவின் சொந்த ஹோண்டா மொபைல் பவர் பேக் ஸ்வாப் நிலையங்களை பயன்படுத்தலாம் அல்லது சார்ஜரை பயன்படுத்தி வீட்டிலேயே எளிதாக பேட்டரியை ரீசார்ஜ் செய்ய முடியும்.
இந்த ஸ்கூட்டரில் உள்ள 50V பேட்டரி பேக், 0 முதல் அதிகபட்ச சார்ஜ் வரை பெற, சார்ஜிங் நேரம் தோராயமாக 6 மணிநேரம் ஆகும். 25% முதல் 75% வரை பெற, 2.7 மணிநேரம் (160 நிமிடங்கள்) மட்டுமே தேவை. ஹோண்டா மொபைல் பவர் பேக்கை மூலம் ஒரு பேட்டரியை 2,500 முறை சார்ஜ் செய்ய முடியும் என்று ஹோண்டா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முன்புறத்தில் 190mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 110mm டிரம் பிரேக் கொண்டுள்ள ஹோண்டா EM1 e ஸ்கூட்டரில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. 90/90-12 முன்புற டயர் மற்றும் பின்புறத்தில் 100/90-10 டயர் வழங்கப்பட்டு சஸ்பென்ஷன் அமைப்பில் டெலிஸ்கோபிக் மற்றும் ட்வீன் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது.
ஹோண்டாவின் இஎம் 1 இ ஸ்கூட்டரின் பரிமாணங்கள் 1,860மிமீ நீளம், 680மிமீ அகலம், மற்றும் 1080மிமீ உயரத்தை கொண்டு 740மிமீ இருக்கை உயரம் கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 135 மிமீ மற்றும் எடை பேட்டரி உட்பட 95 கிலோ மட்டுமே.
இந்திய சந்தைக்கு ஹோண்டா EM.1 e அடிப்படையிலான மாடல் விற்பனைக்கு கூடுதல் ரேஞ்சு கொண்டதாக விற்பனைக்கு வரக்கூடும். இதுதவிர ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் நீக்க இயலாத வகையிலான பேட்டரியை கொண்டிருக்கலாம்.
மேலும் படிக்க. இந்தியாவில் கிடைக்கின்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சிறப்புகள் மற்றும் விலை