Kanaka – ஒரு தலை காதல்.. இரண்டு இறப்புகள்.. காணாமல் போன கரகாட்டக்காரன் கனகா.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Kanaka (கனகா) கரகாட்டக்காரன் மூலம் வெகு பிரபலமடைந்த கனகாவின் வாழ்க்கையில் நடைபெற்ற பல விஷயங்கள் தெரியவந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் பிர்பலமான நடிகையாக வலம் வந்தவர் தேவிகா. இவரது மகள் கனகா. தன்னை போல் கனகா நடிகையாக வரக்கூடாது என்பதில் தேவிகா ரொம்பவே தீவிரமாக இருந்தவர். ஆனால் வாழ்க்கையில் நினைத்தது அப்படியே நடக்காது என்பதற்கேற்ப கனகாவும் சினிமாவில் நடிக்க வேண்டிய சூழல் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரனால் உருவானது.

கரகாட்டக்காரன்: பாடலாசிரியராக பிரபலமடைந்த கங்கை அமரன் ராமராஜனை வைத்து கரகாட்டக்காரன் படத்தை இயக்க முடிவு செய்தார். ஆனால் படத்தில் நடிப்பதற்கு ஹீரோயின் மட்டும் கிடைக்கவில்லை. அவரது நடத்திய ஹீரோயின் தேடல் படலத்தில் அவர் நினைத்த மாதிரி யாரும் கிடைக்காததால் என்ன செய்வதென்று யோசித்தார்.

அந்த சமயத்தில் அவரது வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேவிகா தனது மகள் கனகாவுடன் கலந்துகொண்டார். அப்போது அவரை சமாதானம் செய்து கனகாவை ஹீரோயினாக கமிட் செய்துவிட்டார் கங்கை அமரன்.

மெகா ஹிட்டான கரகாட்டக்காரன்: தேவிகாவுக்கு விருப்பம் இல்லாமல் அரைகுறை மனதோடு ஒத்துக்கொண்டார். அதுமட்டுமின்றி இந்தப் படம் ஒன்று தோல்வி அடையும், இல்லை சுமாராக ஓடும் என நினைத்திருந்தார். ஆனால் அதற்கு நேர் மாறாக படம் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. கனகாவின் நடிப்பும் அசுரத்தனமாக இருக்க இது அவருக்கு முதல் படமா என்ற கேள்வியையே பலரும் முன்வைத்தனர். அதனையடுத்து கனகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

வரிசையான வாய்ப்புகள்: கரகாட்டக்காரனுக்கு அடுத்ததாக அதிசய பிறவி, தங்கமான ராசா, பெரிய இடத்து பிள்ளை,துர்கா, எங்க ஊரு ஆட்டுக்காரன், அம்மன் கோயில் திருவிழா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஹீரோயினாக நடித்தார். அவரது கிராஃப் உச்சத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவரது தாய் தேவிகா உயிரிழக்க ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளானார் கனகா. அவர் கடைசியாக தமிழில் விரலுக்கேத்த வீக்கம் படத்தில் நடித்தார்.

ஒருதலை காதல்;ஒதுங்கிய கனகா: இந்நிலையில் கனகாவின் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது, தனக்கு எல்லாமுமாய் இருந்த தாய் உயிரிழந்ததை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாராம் கனகா.

அப்போது மூத்த நடிகர் ஒருவர் தனது மகனை கனகாவிடம் பி.ஏவாக சேர்த்துவிட்டாராம். அவர் பெயர் ராமச்சந்திரன். ராமச்சந்திரனும் கனகாவை தேற்றி பழைய நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு கனகாவை ஒருதலையாகவும் காதலித்து வந்திருக்கிறார்.

துரத்திய கனகா; உயிரிழந்த ராமச்சந்திரன்: இந்த விஷயம் கனகாவுக்கு தெரியவர ராமச்சந்திரன் தன்னை பாலியல் ரீதியாக பார்க்கிறார் என தவறாக புரிந்துகொண்டு அவரை வேலையிலிருந்து நீக்கி அனுப்பிவிட்டாராம். ஆனால் ராமச்சந்திரனோ உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். அவர் உயிரிழந்த பிறகுதான், தன்னை ராமச்சந்திரன் உண்மையாகவே காதலித்திருப்பது தெரியவந்திருக்கிறது. தாயின் உயிரிழப்புக்கு பிறகு ராமச்சந்திரன் உயிரிழப்பும் கனகாவை ரொம்பவே மன உளைச்சலில் தள்ளியிருக்கிறது.

எரிந்த கனகா வீடு?: இதனையடுத்து தன்னை முழுமையாக தனிமைப்படுத்திக்கொண்ட கனகா சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது ஒரு சமயம் கனகாவின் வீடு எரிந்துவிட்டதாக தகவல் பரவ பத்திரிகையாளர்கள் விரைந்திருக்கின்றனர். ஆனால் வீட்டுக்கு எதுவுமே ஆகவில்லையாம்.

பத்திரிகையாளர்கள் வந்திருப்பதை அறிந்துகொண்ட கனகா, ஏன் நான் மட்டும்தான் உங்களுக்கு செய்தியா?,, உலகத்தில் வேறு செய்தியே இல்லையா என கடுமையாக கத்தினாராம். மன உளைச்சலில் அவர் இருப்பதை தெரிந்துகொண்ட பத்திரிகையாளர்களும் அமைதியாக திரும்பிவிட்டனராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்திருக்கிறார். அந்த இரண்டு உயிரிழப்புகள் நேராமல், கனகா சினிமாவில் நடிக்காமல் இருந்திருந்தால் தற்போது அவர் நிம்மதியாக வாழ்ந்திருப்பார் என்பது உண்மை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.