சென்னை: உப்பென்னா படத்தில் விஜய்சேதுபதியின் மகளாக நடித்து தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான க்ரித்தி ஷெட்டி அடுதடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
தமிழில் எப்படியாவது டாப் ஹீரோயினாக மாற வேண்டும் என்கிற வெறியோடு தொடர்ந்து தமிழ் இயக்குநர்கள் இயக்கத்தில் நடித்து வரும் க்ரித்தி ஷெட்டிக்கு அடுத்தடுத்து 3 இயக்குநர்கள் பண்ண சொதப்பலால் இனி இந்த பக்கம் தலை வைத்து படுப்பாரா? மாட்டாரா என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
க்ரித்தி ஷெட்டியின் கோலிவுட் கனவை தகர்த்த டாப் 3 இயக்குநர்கள் யார் யார் என இங்கே பார்க்கலாம் வாங்க..
லிங்குசாமி பண்ண சம்பவம்: கடந்த ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு பைலிங்குவலாக வெளியான தி வாரியர் திரைப்படத்தின் மூலமாகத்தான் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் க்ரித்தி ஷெட்டி.

சிம்பு பாடிய புல்லட் பாடல் மட்டுமே அந்த படத்தில் க்ரித்தி ஷெட்டிக்கு பிளஸ் ஆக அமைந்தது. மற்றபடி படம் டோட்டல் ஃபிளாப்பாக க்ரித்தி ஷெட்டி பயங்கர அப்செட் ஆகி விட்டார்.
பாடாய் படுத்திய பாலா: லிங்குசாமி படம் ஃபிளாப் ஆனால் என்ன கோலிவுட்டின் டாப் ஹீரோவான சூர்யா உடன் இணைந்து நடித்து சூப்பர் என்ட்ரி கொடுத்து விடலாம் என நினைத்த க்ரித்தி ஷெட்டி இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்க வேகமாக தலையை ஆட்டி ஒப்பந்தம் ஆனார்.

அந்த படத்துக்காக கடுமையாக பல சிரமங்களையும் சகித்துக் கொண்டு நடித்து வந்த க்ரித்தி ஷெட்டி பாலாவின் டார்ச்சர் காரணமாக சூர்யா அந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், அருண் விஜய்யுடன் இணைந்து மறுபடியும் முதல்ல இருந்து பாலா இயக்கத்தில் படாத பாடு பட முடியாது என வணங்கானுக்கு பெரிய வணக்கத்தை போட்டு அவரும் எஸ்கேப் ஆகி விட்டார்.
கஸ்டடியால் கஷ்டப்படுத்திய வெங்கட் பிரபு: மாநாடு எனும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு மற்றும் தமிழ் பைலிங்குவலாக உருவாகும் கஸ்டடி படத்தில் நடித்து கோலிவுட்டின் டாப் ஹீரோயினாக மாறலாம் என கனவு கண்ட க்ரித்தி ஷெட்டிக்கு இந்த வாரம் வெளியான கஸ்டடி படமும் கஷ்டத்தையே கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய சொதப்பலாக கஸ்டடி படம் அமைந்த நிலையில், இனிமேல் தமிழ் இயக்குநர்கள் படங்களில் நடிக்க க்ரித்தி ஷெட்டி சம்மதம் சொல்வாரா? என்பதே சந்தேகம் தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஜெயம் ரவியின் ஜீனி காப்பாற்றுமா?: வேல்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கும் படத்தை இயக்குநர் மிஷ்கினின் உதவி இயக்குநரான புவனேஷ் அர்ஜுன் இயக்க உள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜீனி என பெயரிடப்பட்டுள்ள இந்த படமாவது நடிகை க்ரித்தி ஷெட்டிக்கு கோலிவுட்டில் ஒரு சூப்பர் ஹிட் படமாக மாறுமா? என்பதை வெயிட் பண்ணித் தான் பார்க்க வேண்டும். வெறும் 19 வயதில் படு பிசியான நடிகையாக வலம் வரும் க்ரித்தி ஷெட்டி தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில், தனக்கான பெரிய வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.