தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து, இலங்கைக்கு பயணியர் கப்பல் இயக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் வாயிலாக, சுற்றுலா பயணியர் எண்ணிக்கையும், வருவாயும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள், இலங்கை வழியாக, தமிழகத்தின் சென்னை, எண்ணுார், துாத்துக்குடி துறைமுகங்கள்; புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களுக்கும் வருகின்றன.
சுற்றுலாவையும், வருவாயையும் மேம்படுத்தும் வகையில், இந்த மார்க்கத்தில் பயணியர் கப்பலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக உள்ளது.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் துறைமுகத்தையொட்டி, நாகப்பட்டினம் நாகூர் தர்கா, சர்ச், சிதம்பரம் நடராஜர் கோவில், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில், காரைக்கால் அம்மையார் கோவில், காரைக்கால் கடற்கரை உள்ளிட்ட புனித மற்றும் சுற்றுலா தலங்கள் உள்ளன.
எனவே, காரைக்கால் துறைமுகத்தில் இருந்து, இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறை துறைமுகத்துக்கு பயணியர் போக்குவரத்து கப்பலை இயக்க, தனியார் நிறுவனம் முன்வந்தது. தற்போது, இத்திட்டத்தை அந்நிறுவனம் மாற்றி, புதுச்சேரியில் இருந்து காங்கேசன் துறைக்கு, பயணியர் கப்பல் போக்குவரத்தை துவக்க திட்டமிட்டுள்ளது. புதுச்சேரி மாநில அரசின் முதற்கட்ட அனுமதிக்காக காத்திருக்கிறது.
தனியார் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, புதுச்சேரி – காங்கேசன்துறைக்கு பயணியர்
கப்பல் போக்குவரத்தை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை, அம்மாநிலத்தின் துறைமுகங்கள் துறை மேற்கொண்டு வருகிறது.இது தொடர்பான அறிக்கை, மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், புதுச்சேரி – இலங்கை இடையே, பயணியர் கப்பல் போக்குவரத்து துவங்க வாய்ப்புள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்துதமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து, காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாருக்கு பயணியர் போக்குவரத்தை துவங்க, தமிழக அரசின் கடல் சார் வாரியம் திட்டமிட்டு உள்ளது.
இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும், ராமேஸ்வரம் சிறு துறைமுகத்தில், 50 கோடி ரூபாயில், கப்பல் அணையும் மேடை, பயணியர் தங்குமிடம், சோதனை மையங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுகுறித்து, புதுச்சேரி மாநில துறைமுகங்கள், தமிழக சிறு துறைமுகங்கள் துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதுச்சேரியில் இருந்து, 250 கி.மீ.,யில் உள்ள காங்கேசன் துறை செல்ல, நான்கு மணி நேரத்திற்கு மேலாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்