வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு(டிஆர்ஐ) அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.24 கோடி மதிப்பு வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக மும்பை பிராந்திய டிஆர்ஐ வெளியிட்ட அறிக்கை: அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், டிஆர்ஐ அதிகாரிகள், நவி மும்பையில் உள்ள நவஷேவா துறைமுகத்தில் கண்டெய்னர்களை சோதனை செய்தனர். அதில், ஒரு கண்டெய்னரில் இருந்து ரூ.1.07 கோடி( எண்ணிக்கையில்) வெளிநாட்டில் தயாரான சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் சந்தை மதிப்பு ரூ.24 கோடி ஆகும். இதனை இறக்குமதி செய்தவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement