வரும் மே 23 ஆம் தேதி வெளியாக உள்ள சிம்பிள் எனெர்ஜி ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்தியாவின் மிக அதிகப்படியான ரேஞ்சு தரக்கூடிய மாடலாக எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் முக்கிய அம்சங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சிம்பிள் ஒன் நிதி திரட்டுவதில் ஏற்பட்ட சிக்கலால் விற்பனைக்கு வெளியிடுவது தாமதமானது. இந்நிலையில் ஓசூர் அருகே உள்ள ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.
Simple One escooter
ஏதெர் 450X, ஒலா S1 Pro, பஜாஜ் சேட்டக், ஹீரோ விடா V1 உள்ளிட்ட மாடல்களுடன் பல்வேறு பேட்டரி மின்சார ஸ்கூட்டர்களை எதிர்கொள்ள உள்ள சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில் 8.5 kW மின்சார மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவராக 11 bhp மற்றும் 72 Nm டார்க் வழங்குகின்றது.
இரண்டு விதமான வேரியண்டாக 2021 ஆம் ஆண்டு அறிமுக செய்யப்பட்ட ஒன் மாடலில் குறைந்த விலையில் வேரியண்டில் 4.8 kWh லித்தியம் ஐயன் பேட்டரி பேக் கொண்ட மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 236KM/charge ரேஞ்சு வழங்கும். அடுத்து ஸ்வாப்பிங் பேட்டரி பேக் கொண்டுள்ள வேரியண்ட் அதிகபட்சமாக 300KM/charge வரை வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.
4.8Kwh என்பது 3.3kWh ஃபிக்ஸடு பேட்டரியாகவும் 1.5kWh பேட்டரி நீக்கும் வகையில் ஸ்வாப் நுட்பத்தை கொண்டதாக அமைந்துள்ளது. நீக்கும் வகையிலான பேட்டரி 7 கிலோ எடை கொண்டதாகும்.
இக்கோ மோடில் நிகழ்நேரத்தில் சிம்பிள் ஒன் எலகட்ரிக் ஸ்கூட்டர் 150-180Km வரை வழங்ககூடும். டாப் வேரியண்ட் 210-220Km வரை வழங்கலாம். ஈக்கோ மோடு எனபது 45 Km/h என வரையறுக்கப்பட்டுள்ளது.
0-40km வேகத்தை எட்டுவதற்கு வெறும் 2.95 விநாடிகளை எடுத்துக் கொள்ளும் ஒன் மின்சார ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் 105km/h ஆகும். 90/90-12 அங்குல வீல் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.
சார்ஜிங் நேரத்தை பொறுத்தவரை 0-100 சதவிதம் ஏற 4 மணி நேரம் வீட்டில் உள்ள சார்ஜரே போதுமானதாகும். மேலும் கூடுதலாக ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனை தனியாக ரூ.15,499 கட்டணத்தில் அறிமுகம் செய்தது. இதன் மூலம் 2 மணி 30 நிமிட நேரத்தில் சார்ஜ் செய்யலாம்.
ஏற்கனவே, ரூ.1947 கட்டணமாக வசூலிக்கப்பட்டு சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவு நடைபெற்று 60,000 எண்ணிக்கையை பதிவு செய்திருந்ததாக குறிப்பிட்டிருந்தது. எனவே, இந்த மாடல் விற்பனைக்கு வரும்பொழுது முன்பே பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி வழங்கப்படலாம்.
2021 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சிம்பிள் ஒன் எலக்டரிக் ஸ்கூட்டரின் விலை ₹ 1.11 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டது. தற்பொழுது மாடலின் விலை கூடுதலாக விற்பனைக்கு வரக்கூடும்.