புதுடில்லி: கர்நாடகா தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.
டில்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை வரவேற்க அவரது இல்லத்தில் ஏராளமான காங்., தொண்டர்கள் குவிந்தனர். பின்னர் காங்கிரஸ் தலைவர் கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கர்நாடக மக்கள் பாஜ.,வை நிராகரித்து காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளனர்.
மக்கள் காங்கிரசிற்கு வரலாறு காணாத ஓட்டுக்களை வழங்கியுள்ளனர். எங்களது மேலிட பார்வையாளர்கள் பெங்களூரு சென்றுள்ளனர். அவர்கள் சென்றடைந்தவுடன் காங்., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடக்கும்.
இவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, முதல்வர் நியமனம் குறித்து தங்களது கருத்தை கட்சி மேலிடத்தில் பகிர்ந்து கொள்வார்கள். பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement