பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்து கொள்ள வேண்டும் என்று, திருமாவளவன் கூறியதற்கு, பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக கூட்டணியை அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மறுபரிசலினை செய்ய வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் கர்நாடக தேர்தல் முடிவுகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னறிவிப்பாக இருப்பதாகவும் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரித்தாலும் சூது, சூழ்ச்சி நீண்ட காலம் கை கொடுக்காது என்பதற்கும், கர்நாடக மக்களின் தீர்ப்பு ஒரு சாட்சி என்றும் திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கூலிக்கு மாரடிக்கும் விசிக-விற்கு தெம்பிருந்தால், திராணியிருந்தால் தனித்துப் போட்டியிடட்டும் என்று, பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவரின் செய்தி குறிப்பில், “சூதையும், சூழ்ச்சியையுமே கொள்கையாக கொண்ட திமுக-வை அண்டிப் பிழைத்து அரசியல் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் விசிக உள்ளிட்ட கூலிக்கு மாரடிக்கும் கட்சிகள் தெம்பிருந்தால், திராணியிருந்தால் எல்லா தேர்தல்களையும் தனியாக சந்திக்கட்டும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.