விளாடிமிர் புடினின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரே ஒரு ஆதரவாளர் மிக ஆபத்தான நிலையில் உள்ளார் அல்லது மரணமடைந்திருப்பார் என்ற தகவல் தீயாக பரவி வருகிறது.
பெலாரஸ் ஜனாதிபதி
ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் ஜனாதிபதி தொடர்பிலேயே அதிரவௌக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
68 வயதான அலெக்சாண்டர் லுகாஷென்கோ மே 9ம் திகதி மாஸ்கோவில் வெற்றிவிழா அணிவகுப்பில் கலந்துகொண்டுள்ள நிலையில், திடீரென்று ஆம்புலன்ஸ் மூலமாக விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
@AP
இந்த நிலையில், மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட லுகாஷென்கோ தற்போது மருத்துவ ரீதியான கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ளார் என தகவல் கசிந்துள்ளது.
ஆனால், அவர் இறந்திருக்கலாம் என முன்னாள் சோவிய ஒன்றிய மூத்த பத்திர்கையாளர் ஒருவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
லுகாஷென்கோ திடீரென்று நோய்வாய்ப்பட காரணம் என்ன என்பது வெளியிடப்படவில்லை எனவும், கொரோனா தொடர்பான சிக்கல் அவருக்கு இருந்துள்ளதாகவும், அல்லது அவருக்கு விஷம் வைத்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
@Shutterstock
செவ்வாய்க்கிழமை மாஸ்கோவில் வெற்றிவிழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அவரால், கால் மைல் தொலைவு கூட நடக்க முடியவில்லை எனவும், வாகனம் ஏற்பாடு செய்ய தமது நண்பரான புடினிடன் கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியானது.
விளாடிமிர் புடின் அதிர்ச்சி
மட்டுமின்றி, பெலாரஸ் நாட்டில் நடந்த வெற்றிவிழாவிலும் அவர் உரையாற்றவில்லை என்பதுடன், 2022ல் நடந்த வெற்றிவிழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளையே ஊடகங்கள் ஒளிபரப்பியதாக கூறுகின்றனர்.
லுகாஷென்கோ நிலை அறிந்து விளாடிமிர் புடின் அதிர்ச்சியடைந்ததாகவும், உடனையே அவரை தொடர்புகொள்ள புடின் முயற்சித்ததாகவும், ஆனால் அந்த நிலையில் லுகாஷென்கோவால் அழைப்பை ஏற்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
@getty
லுகாஷென்கோ நிலை குறித்த பெலாரஸ் ஜனாதிபதி மாளிகை இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியிடவில்லை.
ஆனால் அவருக்கு அறுவை சிகிச்சை முன்னெடுக்கப்பட்டதாகவும், தற்போது அவர் குணமடைந்து வருவதாக மட்டும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.