இந்தியாவின் சண்டிகரை சேர்ந்த ஆசிட் விச்சால் பார்வை இழந்த சிறுமி, பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
3 வயதில் ஆசிட் வீச்சு
இந்தியாவின் சண்டிகரை சேர்ந்த கஃபி என்ற 15 வயது சிறுமி, தன்னுடைய 3வது வயதில் எதிர்பாராத விதமாக ஆசிட் வீச்சுக்கு ஆளாகியுள்ளார்.
@gettyimages
கஃபி தனது பெற்றோருடன் புதானா கிராமத்தில் வசித்த போது, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த மூன்று பேர் எதிர்பாராத ஆசிட் வீசியதில், அவருடைய முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், கஃபியின் பார்வை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட கஃபியை, அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால் மருத்துவர்கள் சிறுமிக்கு பார்வை கிடைப்பது கடினம், வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவறாக தான் இருப்பார் என கூறியுள்ளனர்.
சாதித்த மாணவி
இந்நிலையில் இக்குற்றத்தை செய்த நபர்களுக்கு, கஃபியின் தந்தை போராடி சிறைத் தண்டனை பெற்று கொடுத்தார். ஆனால் அவர்கள் இரண்டு ஆண்டுகளில் தண்டனை முடிந்து வெளியே வந்துள்ளனர்.
@ani
இதனை தொடர்ந்து தான் எப்படியாவது சாதிக்க வேண்டுமென வைராக்கியத்தோடு போராடிய சிறுமி, தற்போது சி.பி.எஸ் தேர்வில் 10ஆம் வகுப்பில், 92.5% மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
@ani
’ஒரு நாளைக்கு 5 முதல் 6 மணி நேரம் வரை படிப்பேன். எனது பெற்றோரும், ஆசிரியர்களும் நிறைய ஊக்கம் அளித்தனர். ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்பதே அவரது விருப்பம், நான் என் பெற்றோரையும், ஆசிரியரையும் பெருமை பட செய்வேன்’ என கஃபி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பியூனாக வேலை செய்து தனது பார்வையற்ற மகளை படிக்க வைத்த தந்தையையும், தனது குறையை பொருட்படுத்தாமல் வாழ்வில் வென்று காட்டிய சிறுமியையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.