சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ F23 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. F-சீரிஸ் வரிசை போன்களில் கேமரா செயல்திறன் சார்ந்த தரத்தில் அதிக கவனம் வைத்து வருகிறது ஒப்போ. அதே நேரத்தில் இதன் விலையும் அதிகம் இருப்பதில்லை. இந்நிலையில், F23 போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வரும் சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ரெனோ F23 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.7 இன்ச் திரை அளவு
- ஃபுல் ஹெச்டி ரெஸலூஷன் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
- 5,000mAh பேட்டரி
- 67 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
- டைப்-சி யுஎஸ்பி போர்ட்
- 5ஜி நெட்வொர்க்
- 64 + 2 + 2 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் திறன்
- இந்த போனின் விலை ரூ.24,999. இந்த போனின் முன்பதிவு தொடங்கியுள்ளது
Steal the show, wherever you go! #FlauntYourSuperpower with the #OPPOF235G’s 67W SUPERVOOC™ charging, 8GB RAM + 256GB ROM & 4 years of lag-free performance which makes you a smooth operator
Know More: https://t.co/E6Oy538cYo pic.twitter.com/ApzJ3mzzjg
— OPPO India (@OPPOIndia) May 15, 2023