நாம் அனைவரும் இளஞ்சிவப்பு நிற உதடுகளை தான் விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலும் கருமையான உதடுகளை மறைக்க உதட்டுச்சாயத்தை பூசி மூடிவிடுகின்றோம்.
இந்த பதிவின் மூலம் உங்களது உதடு கருமையாவது ஏன் மற்றும் அதற்கான தீர்வு பற்றி தெரிந்துக்கொள்வோம்.
உதடு கருமைக்கு காரணம் என்ன?
கருமையான உதடுகளுக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று புகைபிடித்தல். அதிக அளவு காபி குடிப்பதால் உதடுகளின் ஹைப்பர் பிக்மென்டேஷன் ஏற்படலாம் ஆகவே உதடு கருமையடையும்.
மலேரியா எதிர்ப்பு மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாலும் உதடு கருமையடையும்.
எவ்வாறு உதட்டை சரிசெய்யலாம்?
- அதிக SPF கொண்ட லிப் பாம் பயன்படுத்தினால், கருமையான உதடுகளை நீங்கும். உதடுகள் வறண்டு போவதை உணரும் தருணத்தில் லிப் பாம் பயன்படுத்தவும். இது ஒரு நாளைக்கு பல முறை பயன்படுத்தலாம்.
- வீட்டில் அல்லது வெளியில் இருக்கும் பொழுது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது நல்லது.
-
தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயைக் கொண்டு உதடுகளை மெதுவாக மசாஜ் செய்வது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உதட்டில் உள்ள கருமையை நீக்கும்.
- கிளிசரின் உதடுகளின் மென்மையான தோலை ஈரப்பதமாக்கி, மிருதுவாக வைத்திருக்கும்.
-
பால் மற்றும் மஞ்சள் தூள் பேஸ்ட் செய்து, உதடுகளில் தடவவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை விட்டு, பின்னர் கழுவினால், மிருதுவான உதடு கிடைக்கும்.
- ஒரு சில ஸ்ட்ராபெர்ரிகளை இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவுடன் கலந்து, தூங்கும் முன் ஒரு உதடுகளில் தடவினால் கருமை தள்ளியோடும்.
-
உங்களிடம் கருமையான உதடுகள் இருந்தால், அவற்றை நீக்குவதற்கு மேலே குறிப்பிட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயன்முறைகளை நீங்கள் பின்பற்றலாம்.