உலகின் முதல் டாப் 5 பணக்கார அரச குடும்பங்கள்! பிரித்தானிய அரச குடும்பத்துக்கு எத்தனையாவது இடம்?


உலகின் பணக்கார அரச குடும்பங்களில் பிரித்தானிய அரச குடும்பம் 5 இடத்தில் உள்ளது, அப்படியானால் முதல் 4 இடங்களில் உள்ள அரச குடும்பங்கள் யார் என்பதை இந்த செய்தியில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 5 அரச குடும்பங்கள்

 
சமீபத்தில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா வெகு பிரம்மாண்டமாக பெரும் பொருட்செலவில் பிரித்தானியாவின் லண்டனில் நடத்தப்பட்டது.

இதை பார்த்த அனைவருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனதில் தோன்றும் எண்ணம், இவர்களின் சொத்து மதிப்பு என்னவாக இருக்கும் என்றே!

King Charles Coronation Twitter

நம்மில் பலர் மன்னர் முடிசூட்டு விழாவை பார்த்துவிட்டு, உலகையே கட்டி ஆண்ட பிரித்தானிய அரச  குடும்பம் தான் உலகில் மிகவும் செல்வ செழிப்பு மிக்க அரச குடும்பம் என்று நினைப்போம்.

ஆனால் பிரித்தானிய அரச குடும்பம், உலகின் செல்வ செழிப்பு மிக்க அரச குடும்பத்தின் வரிசையில் 5வது இடத்திலேயே உள்ளது, முதல் 4 இடங்களையும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரச குடும்பங்களே பிடித்துள்ளன.

முதல் இடத்தில் சவுதி அரேபியாவின் அரச குடும்பம், 2வது குவைத் அரச குடும்பம், 3வது கத்தார் அரச குடும்பம், 4வது இடத்தில் அபுதாபி அரச குடும்பம், 5வது இடத்திலேயே பிரித்தானிய அரச குடும்பம் உள்ளது.

top 5 world richest royal family

முதல் பணக்கார அரச குடும்பம்

உலகின் மிகவும் பணக்கார செல்வ செழிப்பு மிக்க அரச குடும்பமாக சவுதி அரேபிய அரச குடும்பம் திகழ்கிறது.

சவுதி அரேபியா அரச குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பாகும்.

சவுதி அரேபிய அரச குடும்பத்தில் தற்போது மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்-தின் (Salman bin Abdulaziz Al Saud) கீழ் 15,000 அரச குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.

Salman bin Abdulaziz Al SaudBalkis Press/ABACA/PA 

இவர்களது முக்கிய மிகப்பெரிய வருவாய் அவர்களது  எண்ணெய் கிணறுகளில் இருந்து வருகிறது.
சவுதி அரேபிய மன்னர் தற்போது வசிக்கும் அல் யமானா அரண்மனை (Al Yamamah Palace) 4 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

அத்துடன் அவர் விலையுயர்ந்த பிராண்டுகளின் ஆடைகளை மட்டுமே அணிவார். மேலும் தங்க முலாம் பூசப்பட்ட கார், சொகுசு படகுகள், ஆடம்பர தனி விமானங்கள் போன்ற பலவற்றை சொந்தமாக மன்னர் வைத்துள்ளார்.

இரண்டாவது பணக்கார அரச குடும்பம்

உலகின் இரண்டாவது அரச குடும்பம் குவைத் அரச குடும்பம் ஆகும், குவைத் அரச குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 390 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

KuwaitEEA/Flickr CC

இவர்களின் பெரும்பாலான வருவாய் அமெரிக்க பங்குச் சந்தை பங்குகளுடன் இணையப்பட்டதாக  உள்ளது, இவை கடந்த சில வருடங்களாக உச்சத்தை அடைந்து வருகிறது.

மூன்றாவது பணக்கார அரச குடும்பம்

உலகின் மூன்றாவது பணக்கார அரச குடும்பம் கத்தார் அரச குடும்பம், இவர்களின் மொத்த சொத்த மதிப்பு 335 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

உலகின் முதல் டாப் 5 பணக்கார அரச குடும்பங்கள்! பிரித்தானிய அரச குடும்பத்துக்கு எத்தனையாவது இடம்? | Worlds Top 5 Richest Royal Families ListU.S. Department of State/Wikimedia Commons

நான்காவது பணக்கார அரச குடும்பம்

உலகின் நான்காவது மிகப்பெரிய அரச குடும்பம் அபுதாபி அரச குடும்பம் ஆகும், இதன் சொத்து மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

அபுதாபி அரச குடும்பத்தின் தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியின் அமீராகவும், 2004 வரை ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியாகவும் இருந்துள்ளார். 

ஷேக் கலீஃபா சமீபத்தில் பிரித்தானியாவின் லண்டனில் உள்ள மிகப்பெரிய நிலப்பிரபுகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார்.

Crown Prince Court of Abu Dhabi
Crown Prince Court of Abu Dhabi/Wikimedia Commons

5வது பணக்கார அரச குடும்பம்

உலகின் ஐந்தாவது பணக்கார அரச குடும்ப வரிசையில் பிரித்தானிய அரச குடும்பம் உள்ளது.
பிரித்தானிய அரச குடும்பத்தின் மொத்த சொத்த மதிப்பு 88 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

அதில் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் அதிக அளவிலான தனிப்பட்ட நிகர சொத்து மதிப்பை அதாவது 350 மில்லியன் பவுண்ட் மதிப்புகள் சொத்துகளை கொண்டுள்ளார்.

Uk Royal familyAFP

பிரித்தானிய அரச குடும்பத்தின் பெரும்பான்மையான வருவாய் அவர்களின் எஸ்டேட்டுகள் மூலம் வருவதாக சன்டே டைம்ஸ் பணக்கார பட்டியல் 2020 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.