சி.ஐ.எஸ்.சி.இ. அமைப்பு நடத்திய ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் ஐ.எஸ்.சி. எனப்படும் 12-ம் வகுப்புக்கான இறுதி தேர்வுகளின் முடிவுகள் நேற்று வெளியாகின.
இதில், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ள ஹெரிடேஜ் பள்ளியை சேர்ந்த மாணவியான மான்யா குப்தா, 12-ம் வகுப்பு ஐ.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் 99.75 சதவீதம் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, இந்திய அளவில் முதல் இடம் பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.2 ஆண்டுகளாக ஊரடங்கில் இருந்த காலத்திலும், தேர்வுக்கு தயாராக தனது பள்ளி எந்தளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு நிறைய உதவிகளை செய்தது. தேர்வுக்கு முன்பு முக்கியத்துவம் கொடுத்து படித்தேன். அதனால், தூங்குவதற்கான காலநேரம் கூட ஒதுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். உளவியல் படிக்க விண்ணப்பிக்க இருக்கிறேன் என்று அவர் விருப்பம் தெரிவித்து உள்ளார்.