ரியோ டி ஜெனிராயா: ஆப்பிரிக்காவில் 3 சிறுவர்கள் நீர்யானை அப்படியே விழுங்கிய சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.
நீச்சல் என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி செய்யும் ஒரு நிகழ்வாகும். ரிலாக்ஸ் செய்ய, எடை குறைக்க ஒரு உடற்பயிற்சியாகவும் கூட நீச்சல் பயன்படும். இதனால் பலரும் நீச்சலில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதேநேரம் அதைச் சுற்றிப் பல ஆபத்துகளும் சூழ்ந்தே இருக்கிறது. சுறாக்கள், முதலைகள் உள்ளிட்ட ஆபத்தான விலங்குகள் இயற்கை நீர் வழித்தடங்களில் நீச்சலடிப்போருக்கு ஆபத்தாகவே இருக்கிறது. இதை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
நீர்யானை: சுறாக்கள், முதலைகளைக் கண்டு பயப்படுவோர் கூட நீர்யானைகளை ஆபத்தான விலங்காகப் பார்க்க மாட்டார்கள். மாறாக அவை அபிமானமாகவும் அழகாகவும் கருதப்படுகின்றன. இதனிடையே நீர்யானைகள் எந்தளவுக்கு ஆபத்தானது என்பதை விளக்கும் வகையிலான ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதன் வீடியோ அப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதில் மூவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படுவது போல இருக்கிறது.
எப்போதும் க்யூட்டான விலங்குகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் நீர்யானைகள், கிட்டதட்ட 3 சிறுவர்களை விழுங்கி இருக்கும். இந்தச் சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்ததாகும். அந்த மூன்று சிறுவர்கள் தண்ணீரில் வேடிக்கையாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே ஒரு பெரிய நீர்யானை வந்த போது அவர்கள் அஞ்சிவிட்டனர்.
ஆப்பிரிக்கா: அந்த நீர்யானை ஒரு பெரிய சவுண்டு கொடுக்க சிறுவர்கள் அலறியடித்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடினர்.. நல்வாய்ப்பாக அந்த சிறுவர்களும் நீர்யானையும் விலகிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த அந்த நபரும் பதறி ஓடிவிட்டார். ஆப்பிரிக்காவில் கடந்த 2011இல் நடந்த இந்தச் சம்பவம் இப்போது படுவேகமாக டிரெண்டாகி வருகிறது.
இந்த கிளிப் முதலில் பேஸ்புக்கில் சான்வைல்ட் சரணாலயத்தால் பகிரப்பட்டது. அந்த வீடியோவில், “அதிர்ஷ்டவசமாக நீர்யானையிடம் இருந்து சிறார்கள் எஸ்கேப் ஆகிவிட்டனர். இல்லையென்றால் நிச்சயம் அங்கே மோசமான விபத்து ஏற்பட்டிருக்கும்” என்று பதிவிட்டுள்ளனர்.
நீர்யானைகள் எவ்வளவு ஆபத்தானவை மற்றும் கணிக்க முடியாதவை என்பதைப் பலரும் உணர இந்த வீடியோ நிச்சயம் பயன்படும் என்றே வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கினறனர். நீர்யானைகள் பார்க்க க்யூட்டாக இருந்தாலும் நாம் எவ்வளவு தூரம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது. இல்லையென்றால் மோசமான பிரச்சினைகள் ஏற்படும்.
கை குழந்தையை விழுங்கிய சம்பவம்: அதேநேரம் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல்முறை இல்லை. கடந்த காலங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. உகாண்டாவில் நீர்யானை ஒன்று கைக்குழந்தையை அப்படியே விழுங்கியது. நல்வாய்ப்பாக இது சில நொடிகளில் அவரை அப்படியே துப்பியது. இதனால் குழந்தை எஸ்கேப் ஆனது.
குழந்தை தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது, இந்த அச்சுறுத்தல் சம்பவம் நடந்தது. குழந்தையை நெருங்கி நீர்யானை தனது தாடைகளால் குழந்தையைப் பிடித்தது. அங்கே இருந்த மக்கள் அவர்களைக் கவனித்து கற்களை வீசத் தொடங்கினர். இதனால் குழந்தையைத் துப்பிவிட்டு, அருகில் உள்ள ஏரியை நோக்கி ஓடியது. இதுபோன்ற பகீர் சம்பவங்கள் இணையத்தில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.