சென்னை: கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது டிவிட் பதிவில் கூறியிருப்பதாவது:-
கள்ளச்சாராய மரணங்கள் என்னும் துயரச் செய்தி வந்ததும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு விரைந்தேன். இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடமை தவறிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இனி இப்படி ஒரு சம்பவம் நிகழக் கூடாது என ஆய்வுக் கூட்டத்தில் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளேன். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன்.

கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்!” என்று பதிவிட்டுள்ளார்.