காங்கிரஸ்-க்கு ஆரம்பித்த தலைவலி.. நீதிமன்றம் சம்மன்.. டெரர் அமைப்பை நோண்டியதால் வினை.!

இந்துத்துவ அமைப்பை அவமதித்தாக கூறி தொடரப்பட்ட வழக்கில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கர்நாடகா தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடைபெற்றது. அதையடுத்து மே 13ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில்
காங்கிரஸ்
கட்சி 135 தொகுதிகளை வென்று ஆட்சி அமைக்க உள்ளது. அதேபோல் பாஜக 66 இடங்களில் வென்று எதிர்கட்சியாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வென்றுள்ளது. இந்தநிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் தீவிர இந்த்துவ அமைப்பான பஜ்ரங் தள்ளை தடை செய்வோம் என அறிவித்தது.

இந்த பஜ்ரங் தள் அமைப்பானது பல்வேறு வன்முறை சம்பவங்களில் நேரடி தொடர்புடையது. காதலர் தினத்தில் பூங்காவில், கடற்கரையில் அமர்ந்திருக்கும் ஜோடிக்களை தாலி கட்டச் சொல்லி மிரட்டுவது, இஸ்லாமிய வீதிகளில் யாத்திரை மேற்கொண்டு வன்முறையில் ஈடுபடுவது, ஒடிசாவில் மருத்துவம் பார்க்க வந்த ஆங்கிலேயரை கிறிஸ்தவம் மதத்தை பரப்புவதாக கூறி குடும்பத்தை உயிரோடு எரித்தது, கொலை ஆயுதங்களை கொண்டு பொதுமக்களை மிரட்டுவது என பல்வேறு விவகாரங்களில் இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தள்ளின் பெயர் அடிபட்டுக் கொண்டே இருக்கிறது.

அதேபோல் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ, தீவிர இந்துத்துவ அமைப்பான விஸ்வ ஹிந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை தீவிரவாத இயக்கங்கள் என குறிப்பிட்டுள்ளது. இந்த சூழலில் தான் கர்நாட்காவில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் பஜ்ரங் தள் அமைப்பை தடை செய்வோம் என அறிவிக்கப்பட்டது.

மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ சமூகத்தில் வெறுப்பை உமிழும் தனி நபர்கள் அல்லது அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பஜ்ரங் தள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அமைப்பு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அல்கொய்தா போன்ற அமைப்புகளை போன்று செயலாற்றி வருகிறது என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.

mallikarjun kharge

அதைத் தொடர்ந்து பஜ்ரங் பாலி என அழைக்கப்படும் கடவுள் அனுமனை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜகவினர் பிரச்சாரம் செய்தனர். வாக்கு செலுத்தும் போது ஜெய் பஜ்ரங் பாலி என கோஷமிடுவதை மறக்காதீர்கள், பஜ்ரங் பாலி காங்கிரஸ் கட்சிக்கு தண்டனை வழங்குவார் என பிரதமர் மோடி கர்நாடகா பிரச்சாரத்தில் பேசினார்.

இந்தநிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பஞ்சாப் மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்து அமைப்பை அவமதித்தற்கு 100 கோடு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என பஜ்ரங் தள் இந்துஸ்தான் அமைப்பு தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.