குடும்ப அட்டைகளுக்கு வந்த சிக்கல்… இன்னும் டைம் இருக்கு… முக்கியத் தகவல்!

தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மிகவும் முக்கிய பங்காற்றி வருகின்றன. 39 மாவட்டங்களில் 316 வட்டங்களில் 34,792 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த அட்டைகள் மூலம் 7 கோடிக்கும் அதிகமானோர் வாடிக்கையாளர்களுக்கு பயன் கிடைத்து வருகிறது. இவர்களின் ஆதார் மற்றும் கைபேசி விவரங்கள் தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

​குடும்ப அட்டைகள் பயன்பாடுஒவ்வொரு முறை பொருட்கள் வாங்கும் போதும் தனிப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே வழங்கப்படுகின்றன. தற்போது குடும்ப அட்டைகளுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. குடும்ப அட்டைகள் தொடர்பான பல்வேறு விதமான சேவைகளுக்கு ஆன்லைனில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
​பொது விநியோகத் திட்ட சேவைஅதன்படி, tnpds.gov.in என்ற இணையதளத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பிக்க, திருத்தம் செய்ய, பெயர் நீக்கம் மற்றும் பெயர் சேர்க்க எனப் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உரிய வழிகாட்டுதலின் பேரில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டியதை ஆன்லைனிலேயே செய்து முடித்து விடலாம். இதற்கிடையில் தனி மனித அடையாளமாக கருதப்படும் ஆதார் அட்டையை பிற ஆவணங்களுடன் இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. அதில் குடும்ப அட்டைகளும் அடங்கும்.​
​​
​ஆதார் எண் இணைப்புஇதற்காக உரிய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் பலரும் குடும்ப அட்டைகள், ஆதார் இணைப்பு இன்னும் உறுதி செய்யவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக வரும் ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட ஒன்றரை மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் குடும்ப அட்டைகள், ஆதார் இணைப்பை வாடிக்கையாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாடிக்கையாளர் சேவை மையம்இல்லையெனில் அரிசி, கோதுமை உள்ளிட்ட எந்தவித பொருளும் கிடைக்காது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சேவை மையங்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு நேரில் செல்லும் போது ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டைதாரரின் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து கொண்டு சென்றால் எளிதில் இணைத்து விடலாம். ஒருவேளை நேரில் செல்ல முடியவில்லை எனில், ஆன்லைனில் இணைக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.​
​​
​ஆன்லைன் வழி இணைப்புமேற்குறிப்பிட்ட தமிழக அரசின் பொது விநியோகத் திட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தனிப்பட்ட பயனாளர் லாகினில் உள்ளே செல்ல வேண்டும். அங்கு மொபைல் எண்ணை பதிவு செய்தால் OTP வரும். அதை சம்பந்தப்பட்ட இடத்தில் பதிவு செய்தால் புதிய பக்கம் திறக்கும். அதில் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை பார்க்கலாம். அங்குள்ள ஸ்கேன் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி ஆதார் குறித்த விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே பதிவு செய்திருந்தால் அதுதொடர்பான விவரங்கள் அதில் இடம்பெற்றிருப்பதை பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.