கோவை: கோவையில் சிஎஸ்கே ஜெர்சியின் நிறமான மஞ்சள் நிறத்தில் சேலை அணிந்து கொண்டு நடிகையும் பாஜக நிர்வாகியுமான நமீதா கிரிக்கெட் விளையாடி அசத்தினார்.
நமீதா என்றாலே நல்ல உயரம், அழகு, கவர்ச்சி, சிரிக்கும் போது ஏற்படும் குழி இவைதான் ஞாபகத்துக்கு வரும். அவர் கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழுக்கு ரசிகர்கள் அடிமை. அத்துடன் பட பிரமோஷன்களில் அவர் ஹாய் மச்சான்ஸ் என அழைப்பார்.
இந்த வார்த்தையை கேட்டதும் இளைஞர்கள் துள்ளி குதிப்பார்கள். இப்படி பேசி பேசி தமிழ் சினிமா ரசிகர்களின் மனக்கோவிலில் அமர்ந்தார். நடிகை நமீதா சற்று உடல் எடை கூட இருந்ததாக சொல்லப்படும் நிலையில் அவர் அவ்வப்போது ஃபிட்னஸ் வீடியோக்களை வெளியிடுவார்.
சினிமா துறையில் கொடி கட்டி பறந்த நமீதா அரசியலில் ஒரு வலம் வர வேண்டும் என ஆசையில் அந்த துறையில் இறங்கினார். அவர் பாஜகவில் இணைந்தார். தேர்தல் பிரச்சாரங்களில் கொஞ்சும் தமிழில் பேசி வாக்குகளை சேகரிப்பார். கர்நாடகா தேர்தல் தமிழக பாஜக தலைவர் அணணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் கர்நாடகா 66 இடங்களை பெற்று பெரும்பான்மை இல்லாமல் தோல்வி அடைந்தது. இதற்காக அரவக்குறிச்சியில் தோற்ற அண்ணாமலையை ஒட்டுமொத்த மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக போட்டது குறித்து நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர். இதனால் கோபமடைந்த நமீதா, அவர் மைசூர் சிங்கம் அவரை ஏன் கிண்டல் செய்றீங்க. இந்த வேலை எல்லாம் வேண்டாம்.
இந்த முறை ஜெயிக்கலைன்னா அடுத்த முறை ஜெயிக்க போறோம். அதற்காக ஏன் தலைவரை (அண்ணாமலை) திட்டுறீங்க என கோபமடைந்தார். இந்த நிலையில் கோவையில் தெற்கு பாஜக சார்பில் பாஜக குடும்ப ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மதுக்கரையில் நடந்தது. இந்த போட்டியில் நடிகை நமீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது கிரிக்கெட் விளையாட்டை அவர் விளையாடி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேட்டிங் செய்தார். சூப்பராக அடித்ததால் அங்கிருந்தவர்கள் பாராட்டினர். இதையடுத்து இன்னும் முறை விளையாடுங்கள் என சொன்னவர்களிடம் நமீதா அய்யய்யோ போதும் என்றார். பிறகு பவுலிங் போட்டார். அதையும் சிறப்பாகவே செய்தார்.
நமீதா கிரிக்கெட் விளையாடியதை விட சிஎஸ்கே நிறமான மஞ்சள் நிற சேலை அணிந்து கொண்டு அவர் விளையாடியதை பார்த்த போது அங்கிருந்தோர் ஆரவாரம் செய்தனர். அவருக்கு அண்மையில்தான் இரட்டை குழந்தைகள் பிறந்தன. எனினும் கைக்குழந்தை வைத்துக் கொண்டு கட்சி பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருவதற்கு பாராட்டுகள் குவிகின்றன.