தமிழக மாவட்டம் விழுப்புரத்தில் போலி மது அருந்தியவர்களில் 6 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலி மது விற்பனை
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் போலி மது (கள்ளச்சாராயம்) விற்கப்பட்டுள்ளது.
இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர்.
அதில் 3 பேர் பலியான நிலையில், மேலும் 3 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலி மது விற்ற அமரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
காவலர்கள் பணியிடை நீக்கம்
மேலும், மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன் மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், போலி மது அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.