மரக்காணத்தில் கள்ளச்சாரயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் தமிழ் நாடு சாராய மாநிலம் ஆகிவிட்டது என்று பா.ம.க தலைவர் அன்புமணிராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்..
தமிழகத்தில் கள்ளச்சாரயத்தால் ஏற்படும் உயிர் பலிகளை தடுக்கவே அரசு சாராயம் விற்பதாக கூறி வந்த நிலையில் கள்ளச்சாராயம் இருக்கின்றது என்றால் என்னய்யா நடக்குது இங்க? என்று பா.ம.க தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்
யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அரசு சாராயம் விற்பதால் , கடந்த வருடம் மட்டும் அரசுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணம் வருவாயாக கிடைத்திருப்பதாக அன்புமணி தெரிவித்தார்
இதன் தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் முண்டியம் பாக்கத்தில் சிகிச்சைப்பெற்று வருபவர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆறுதல் கூறினார்