திடீரென பாரிஸ் வந்தடைந்த ஜெலென்ஸ்கி: நண்பர் மேக்ரானை அதற்காக சந்திப்பேன் என பதிவு


உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பாரிசுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.

ஜெலென்ஸ்கியின் ஐரோப்பிய சுற்றுப்பயணம்

ஜேர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, அங்கு வால்டர் ஸ்டெய்ன்மியர் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், தங்களுக்கு பெருமளவில் உதவி புரியும் ஜேர்மனிக்கு அவர் நன்றி தெரிவித்தார். அத்துடன் உக்ரைனின் உண்மையான நண்பன் மற்றும் நம்பகமான கூட்டணி ஜேர்மன் என குறிப்பிட்டார்.

ஜெலென்ஸ்கி/zelensky Thomas Samson, Pool via AP

பாரிஸ் பயணம்

இந்த நிலையில், ஜேர்மனியில் இருந்து பிரான்ஸ் விமானம் மூலம் ஜெலென்ஸ்கி பாரிஸ் வந்தடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, இரு நாட்டின் தலைவர்களும் (ஜெலென்ஸ்கி மற்றும் மேக்ரான்) இரவு விருந்தில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும், உக்ரைனுக்கு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் அசைக்க முடியாத ஆதரவை மேக்ரான் உறுதிப்படுத்துவார் என்றும் அவரது அலுவலகம் கூறியுள்ளது.

அத்துடன், உக்ரைனின் நியாயமான உரிமைகளை மீட்டெடுப்பதற்கும், அதன் அடிப்படை நலன்களைப் பாதுகாப்பதற்கும் தங்கள் ஆதரவை மேக்ரான் உறுதிப்படுத்துவார் என்றும் கூறியது.

ஜெலென்ஸ்கி-மேக்ரான்/zelensky-macron Getty Images

நண்பர் இமானுவல் மேக்ரான்

முன்னதாக ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பதிவில், ‘பாரிஸில் ஒவ்வொரு வருகையின்போதும், உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் விரிவடைகின்றன. ஐரோப்பாவுடனான உறவுகள் வலுவடைவதுடன், ரஷ்யா மீதான அழுத்தமும் அதிகரிக்கிறது.

நான் என் நண்பரான இமானுவல் மேக்ரானுடன் ஒரு சந்திப்பை நடத்துவேன், மேலும் இருதரப்பு உறவுகளின் மிக முக்கியமான விடயங்களைப் பற்றி பேசுவோம்’ என கூறியிருந்தார்.

அதேபோல், ரஷ்யா இந்தப் போரை ராணுவ ரீதியாக வெல்லக் கூடாது என்றும், உக்ரேனியர்களின் எதிர் தாக்குதலுக்கு எவ்வாறு உதவுவது மற்றும் தவிர்க்க முடியாமல் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் பாதுகாப்பு உத்தரவாதங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பார்ப்பது நம் கையில் உள்ளது என மேக்ரான் கூறியிருந்தார்.

உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள், எடை குறைவான டாங்கிகள், Howitzers மற்றும் எரிபொருள் உள்ளிட்ட ஆயுதங்களின் வரிசையை பிரான்ஸ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஜெலென்ஸ்கி-மேக்ரான்/zelensky-macron  EPA-EFE



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.