திருமாவளவன்: பாஜகவை அதிமுக கழட்டிவிட வேண்டும்.. இதுக்கு மேலயும் சும்மா இருந்தா க்ளோஸ்.!

பாஜகவை கூட்டணியில் சேர்ப்பது பற்றி அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என

கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலில்

கட்சி 136 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் அடர்த்தியாக வாழும் பெங்களூரு பகுதிகளில் பத்து சட்டமன்றத் தொகுதிகளில் விசிக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டோம். விசிக சார்பில் பிரச்சாரம் செய்யப்பட்ட 11 தொகுதிகளில் எட்டு தொகுதிகளை காங்கிரஸ் வென்றிருக்கிறது. என்பது பெரு மகிழ்ச்சியளிக்கிறது.

காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களை வென்றது மட்டுமின்றி அதிகமான வாக்கு சதவீதத்தையும் பெற்றிருக்கிறது. இதுவரை கர்நாடகாவில் ஆட்சி அமைத்த கட்சிகளிலேயே 43 விழுக்காடு வாக்காளர்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாக காங்கிரஸ் இந்தத் தேர்தலில் சாதனை புரிந்துள்ளது. காங்கிரசுக்கு வாக்களித்த 43 சதவீத வாக்காளர்களில் சுமார் 35 சதவீதத்தினர் இந்துக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மதசார்பற்ற ஜனதாவுக்கு கிடைத்துள்ள 13.3 சதவீத வாக்குகள் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றுக்கு எதிராக அளிக்கப்பட்டவையே ஆகும். எனினும் அதில் சரிபாதிக்கும் மேலாக பாஜகவுக்கு எதிரானவையே ஆகும். ஒட்டுமொத்தத்தில் காங்கிரசுக்கு கிடைத்துள்ள 43 சதவீதத்துடன் மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு கிடைத்துள்ள வாக்குகளில் 6 சதவீத்தையும் சேர்த்தால் சுமார் 50 சதவீத மக்கள் பாஜகவை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

அதில் சிறுபான்மையினர் வாக்குகளைக் கழித்துப் பார்த்தால் சுமார் 40 சதவீத்த்துக்கும் மேலான இந்துக்கள் பாஜகவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. இதன்மூலம். இந்துக்கள் எல்லாம் தங்களைத் தான் ஆதரிக்கிறார்கள் என்கிற பாஜகவின் பொய்ப் பிரச்சாரத்தை இந்தத் தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்தி உள்ளன.

கர்நாடகாவில் பாஜக தோற்கடிக்கப்பட்டதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாஜக முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அத்துடன், இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக படுதோல்வியைத் தான் சந்திக்கும். 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் முன்னறிவிப்பாக இருக்கின்றன. மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்பது இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டது.

கர்நாடகாவிலிருந்து பாஜகவை விரட்டியதன் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்குச் சற்றே ஆறுதல் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்திலிருந்துதான் மதவாத நச்சுக் கிருமிகளைத் தமிழ்நாட்டிலும் பிற அண்டை மாநிலங்களிலும் பரப்பி வந்தனர். இப்போது அந்த பேராபத்தின் தீவிரம் குறைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவை தூக்கிச் சுமந்து வரும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பாஜகவுடன் கொண்டுள்ள தங்களது கூட்டணி உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

கர்நாடக தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி தான் என்றாலும், இந்த வெற்றியை நாடு தழுவிய வெற்றியாகக் கொண்டாட வேண்டிய கடமை அனைத்து சனநாயக அமைப்புகளுக்கும் குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கும் உள்ளது. இதன்மூலம் பாஜகவை ஒட்டுமொத்தமாக ஆட்சி அதிகார பீடத்திலிருந்து துடைத்தெறிவதற்கு எதிர்க்கட்சிகளின் ஐக்கியம் இன்றியமையாததாகும். எனவே, பாஜக எதிர்ப்பு சக்திகள் யாவும் ஒன்றுபட்டு திட்டமிட்ட முறையில் செயல்பட வேண்டும்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.