
தெலுங்கில் அறிமுகமாகும் அபர்ணா தாஸ்
மலையாள நடிகையான அபர்ணா தாஸ், விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'டாடா' படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது 'சீக்ரெட் ஹோம்' என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். வளரும் இளம் நடிகர் பஞ்சா வைஷ்ணவ் தேஜின் 4வது படத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ரீலீலாவும் நடிக்கிறார். ஸ்ரீகாந்த் என் ரெட்டி இயக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜும் நடிக்கிறார். இப்படத்தை எஸ் நாக வம்சி மற்றும் எஸ் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் வஜ்ர காலேஸ்வரி தேவியாக அபர்ணா தாஸ் நடிக்கிறார்.