“பக்கா”..கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தால் மாறப்போகும் சென்னை பயணம்.. ஜிஎஸ்டியில் இனி “நோ டிராபிக்”

சென்னை: கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புறநகர் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதன் வழியாக ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கும் பணி நிறைவடைந்து விரைவில் திறந்து வைக்கப்பட உள்ள நிலையில், ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சிஎம்டிஏ தலைவருமான சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம். கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய புறநகர் பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் பேருந்து முனையில் வான்வழியிலிருந்து பார்த்தால் உதயசூரியன் சின்னம்போல் காட்சிதரும்.

கருணாநிதி பெயரிலான இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. அங்கிருந்து, ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் அமைச்சர் சேகர் பாபு ஆலோசனை மேற்கொண்டார்.

காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரை அடுத்த சென்னை வெளிவட்ட சாலை, வரதராஜபுரத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கான இடத்தினை நேரில் சென்று அமைச்சர் பார்வையிட்டார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக வருகின்ற ஜூன் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படும்.

கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து முனையத்தின் முடிவுற்றப் பணிகள் தொடர்பாக இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இம்முனையத்திலிருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், தென்மாவட்ட பேருந்துகள் செல்ல மாற்று வழித்தடங்கள் அமைப்பது தொடர்பாகவும் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Minister Sekar babu meeting about Kilambakkam bus terminal and GST road connection

இந்த கூட்டத்தில் கூடுவாஞ்சேரியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாகவும், கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் சாலை முதல் மண்ணிவாக்கம் வரை 7 கிலோமீட்டர் நீளத்திற்கும், கண்டிகை முதல் கூடுவாஞ்சேரி வரை – 18 கிலோமீட்டர் நீளத்திற்கும். நல்லம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை வரை 10 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், சென்னை வெளிவட்ட சாலை, வரதராஜபுரத்தில் அமையுள்ள தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் (Omni Bus Ide Parking) இடம் தேர்வு செய்வதற்காக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.” என்று தெரிவித்து இருக்கிறார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.