அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊன் உண்ணும் போதை மருந்து புழக்கத்தை ஒழிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதைக்காக பயன்படுத்தும் மக்கள்
அமெரிக்காவில் பசு மாடுகள் மற்றும் குதிரைகளை சாந்தப்படுத்த பயன்படுத்தும் மருந்து ஒன்றை தற்போது சட்டவிரோதமாக மக்கள் போதைக்காக பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
@getty
தற்போது அந்த மருந்தானது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவலாக புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், இந்த மருந்தானது தொழில்நுட்ப ரீதியாக சட்டப்பூர்வமானது என குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், இதன் புழக்கத்தை தடுக்க நகரம் முழுக்க தீவிர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மருந்தின் பயன்பாடு தொடர்பிலும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
@dailymail
இந்த மருந்தால் உடலில் ஏற்படும் காயங்கள் ஆறாது எனவும், ஊன் உண்ணும் மருந்து இது எனவும் விளக்கமளித்துள்ளனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் வரிப்பணத்தில் 22 மில்லியன் டொலர் செலவிட்டு மறுவாழ்வு மையம் ஒன்றை உருவாக்கியதில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
கடந்த ஆண்டு 70,000 பேர்கள் மரணம்
சான் பிரான்சிஸ்கோவில் மட்டும் 2022ல் 500 பேர்கள் அதிக போதை மருந்து காரணமாக இறந்துள்ளனர்.
2021ல் இந்த எண்ணிக்கை 641 என இருந்தது. தற்போது அந்த மையத்தை வீடற்றவர்களுக்கு பயன்படும் வகையில் மாற்ற உள்ளனர்.
@getty
அமெரிக்காவில் மட்டும் ரசாயன போதை மருந்து பயன்பாட்டால் கடந்த ஆண்டு 70,000 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.
2016ல் 52,000 என இருந்த எண்ணிக்கை 2021ல் 106,000 என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.