சி.பி.ஐ. இயக்குநராக உள்ள சுபோத் குமார் ஜெயிஸ்வாலின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், புதிய சி.பி.ஐ. இயக்குநரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மூன்று மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளை பிரதமர் தலைமையிலான குழு பரிந்துரைச் செய்திருந்தது. இந்நிலையில், கர்நாடகா மாநில காவல்துறை டி.ஜி.பி.யாக உள்ள பிரவீன் சூட்டை புதிய சி.பி.ஐ. இயக்குநராக நியமித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை உத்தரவிட்டுள்ளது.