ரஷ்ய நகரங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தவில்லை.. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைக் காப்பாற்றவே எதிர் தாக்குதல் என ஜெலன்ஸ்கி விளக்கம்!

ரஷ்யப் பகுதிகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைக் காப்பாற்றவே எதிர் தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும் ரஷ்யாவின் இலக்குகளைத் தாக்க உக்ரைனுக்கு எந்த திட்டமும் இல்லை என்றும் ஜெலன்ஸ்கி கூறினார். இம்மாதத் தொடக்கத்தில் மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகை மீது ஆளில்லா விமானம் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது.

இதனிடையே அவசியம் இருக்கும் வரை உக்ரைனை ஆதரிப்பதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.