டெல்லி, சென்னை, பெங்களூர் என நாட்டில் இருக்கும் அனைத்து முக்கிய நகரங்களிலும் கனேக்டிவிட்டிக்கு முக்கிய பொது போக்குவரத்தாக இருப்பது மெட்ரோ. டிராபிக் பிரச்சினை இல்லை, பன்சுவாலிட்டி என மெட்ரோவை விரும்பப் பல காரணங்கள் இருக்கிறது.
நாட்டின் மிக விரிவான மெட்ரோ சேவையை கொண்ட நகரங்களில் ஒன்றாக டெல்லி இருக்கிறது. டெல்லி மெட்ரோவை ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
டெல்லி மெட்ரோ: அதேநேரம் டெல்லி மெட்ரோவில் நடக்கும் பல சம்பவங்கள் இப்போது இணையத்தில் பேசுபொருள் ஆகி வருகிறது. சிலர் டெல்லி மெட்ரோவில் மிக மோசமான செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள். பயணிகள் கண்ணியமாக நடந்து கொள்ளும்படி டெல்லி மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும் கூட, சில அத்துமீறல் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தே வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இளம் பெண் ஒருவர் டெல்லி மெட்ரோவில் பிகினி உடையில் பயணித்தார். அந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தது. 2 பீஸ் உடையில் அந்த பெண்ணை பலரும் விமர்சித்தனர். இந்த பரபரப்பு ஓய்வதற்குள், இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்யும் வீடியோ, இரு ஆண்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோ எனத் தொடர்ந்து பகீர் கிளப்பி வருகிறது.
அத்துமீறல்கள்: ரீல்கள் முதல் லிப்லாக்குகள் வரை டெல்லி மெட்ரோவில் பல வினோத சம்பவங்கள் நடக்கிறது. அதேபோன்ற மற்றொரு சம்பவம் தான் இப்போது டெல்லி மெட்ரோவில் மீண்டும் அரங்கேறியுள்ளது. சமீபத்தில், டெல்லி மெட்ரோவில் ஒரு ஜோடி அமர்ந்திருக்கும் வீடியோ ஆன்லைனில் வெளியானது. கடந்த காலத்தில் வெளியாகி பகீர் கிளப்பிய வீடியோ போல இதில் எந்தவொரு அத்துமீறலும் நடக்கவில்லை.
அபினவ் தாக்கூர் என்ற நபர் தான் டெல்லி மெட்ரோ ரயிலில் இந்த ஜோடி ஒன்றாக அமர்ந்திருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவர், “(இவர்கள்) என்னைச் சங்கடமாக உணர வைக்கிறார்கள்.. தயவு செய்து உதவுங்கள்” என்ற அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும், டெல்லி மெட்ரோ ட்விட்டர் கணக்கையும் அவர் டேக் செய்திருந்தார்.
புது வீடியோ: இருப்பினும் அதில் அத்துமீறல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை. அந்த வீடியோவில் ஒரு யூனிபார்மில் இருக்கும் அந்த ஜோடி, நெருக்கமாக அமர்ந்துள்ளனர். அந்த பெண் இளைஞர் மீது சாய்ந்து இருக்கிறார். இளைஞரின் கை பெண்ணை சுற்றி இருக்கிறது. இருப்பினும் அவர்கள் அநாகரீகமாக எதையும் செய்யவில்லை.. அப்படியிருக்கும் போது இந்த நபருக்கு என்ன பிரச்சினை என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பலரும் இந்த ஜோடியைப் படம்பிடித்த அந்த இளைஞரைத் தான் சாடி வருகிறார்கள். பயணிகளின் அனுமதி இல்லாமல் வீடியோ எடுப்பது கிரிமினல் குற்றமாகும் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர், உண்மையில் இவர்கள் இந்தளவுக்கு அன்பை வெளிப்படுத்துவதைப் பார்த்தால் சந்தோஷமாக இருப்பதாகவே பதிவிட்டுள்ளனர்.
கொந்தளிக்கும் நெட்டிசன்கள்: மற்றொரு நெட்டிசன், “ஒரு ஜோடி சில் செய்வதைப் பார்த்தால் உனக்கு சங்கடமாக இருக்கிறது என்றால் உனக்குத் தான் ஏதோ பிரச்சினை இருக்கு.. இதில் என்ன தவறு இருக்கிறது. நீ அந்த மெட்ரோவில் இருந்து இறங்கிவிடு” என்று பதிவிட்டு வருகின்றனர்.
அதேநேரம் அவர்கள் முதலில் செய்த சில காரியங்களே சங்கடமாக உணரச் செய்த காரியங்களை ரெக்காட் செய்யவில்லை என்று அந்த அபினவ் சமாளித்து வருகிறார்.