கிரெட்டா, கிராண்ட் விட்டாரா உள்ளிட்ட எஸ்யூவி மாடலுக்கு சவால் விடுக்கும் ஹோண்டா எலிவேட் கார் ஜூன் 6, 2023 அறிமுகம் செய்யப்பட உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த மாடல் பல்வேறு வசதிகளை பெற்றிருக்கும்.
போட்டியாளர்களாக ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், எம்ஜி ஆஸ்டர் மற்றும் டொயோட்டா ஹைரைடர், வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் ஆகிய மாடலை ஹோண்டா எலிவேட் எஸ்யூவி எதிர்கொள்ள உள்ளது.
Honda Elevate SUV launch date
ஹோண்டா சிட்டி காரில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. இதன் பவர் மற்றும் டார்க் தொடர்பான விபரங்கள் வெளியாகவில்லை.
சிட்டி காரில் உள்ள என்ஜின் பவர் 121hp மற்றும் 145Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. எனவே, இது போன்ற ஒரு ஆப்ஷனை எதிர்பார்க்கலாம்.
சமீபத்தில் வெளியான டீசர் மூலம் காரில் சன்ரூஃப் இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், மிக நேர்த்தியான டிசைனை பெற்று எல்இடி ஹெட்லேம்ப் கொண்டு 4.2-4.3 மீட்டர் நீளத்துக்குள் வரவுள்ளது.
10.2 அங்குல ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ADAS ஆகிய தொகுப்பு பெற்றிருக்கும்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் கொண்டுள்ளதால் ஹோண்டா, எலிவேட் எஸ்யூவி விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.