சென்னை : விருமாண்டி பட நடிகை திருமணமாகி 14 ஆண்டுகளுக்கு அம்மாவான மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.
நடிகை அபிராமி 2001ம் ஆண்டு வானவில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
அதன்பின் விருமாண்டி, மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை அபிராமி : கணிசமான படங்களில் நடித்து வந்த அபிராமி 2004ம் ஆண்டு கமல் இயக்கத்தில் வெளியான விரும்மாண்டி படத்தில் நடித்திருந்தார். மரண தண்டனை தேவை இல்லை என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் அபிராமி அண்ணலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
பாராட்டிய கமல் : கமல் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அபிராமியை வெகுவாக பாராட்டி இருந்தார். அவர் வேற்று மொழி காரார் இருந்தாலும் தெற்கத்திய ஸ்லாங் எப்படி பேசினார் பார்த்திருப்பீர்கள். என்னுடன் நடிக்கும் எல்லா ஹீரோயின் டப்பிங்க்கு இவரைத்தான் கூப்பிடுவேன். விஸ்வரூபம் படத்திலும் இவர்தான் டப்பிங். அமெரிக்கன் ஆங்கிலத்தில் அந்த ஊர்காரர் மாதிரியே நானும் அவரும் பேசியிருப்போம். திறமையான நபர் அபிராமி என்று புகழ்ந்து இருந்தார்.
அமெரிக்காவில் செட்டில் : கடந்த 2009-ம் ஆண்டு மலையாள எழுத்தாளரான பாவனனின் பேரன் ராகுலை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். அதன்பின்னர் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த அபிராமியை, கமல் விஸ்வரூபம் படத்தில் டப்பிங் பேசுவதற்காக அழைத்தார். அதன்பின் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படம் மூலம் சினிமாவில் தன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அபிராமி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
அம்மாவான அபிராமி : இந்நிலையில், நடிகை அபிராமி அன்னையர் தினத்தை முன்னிட்டு கையில் குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு நானும் ராகுலும் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறோம். அவள் அனைத்து வகையிலும் எங்கள் வாழ்க்கையை மாற்றி இருக்கிறாள் என்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். திருமணமாகி 14 ஆண்டுகளுக்கு பிறகு அம்மாவான தகவலை மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். அவருக்குத் நடிகர், நடிகைகள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.