இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாதம் நிகழ உள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சி 18 ஆண்டுகளுக்கு பிறகு மீனம், கன்னி ராசிக்கு வர உள்ளதால் யாருக்கெல்லாம் பலன்கள் கிடைக்கப்போகுதுன்னு பார்ப்போம் –
மேஷம்:
இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்கார்களுக்கு ராகு விரைய ஸ்தானத்திற்கும் கேது 6ம் வீடான நோய் எதிரி சத்ரு ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இதனால், போட்டி பொறாமை ஒழிய உள்ளது. நோய் பிரச்சினை நீங்க உள்ளது. இந்த கேது பெயர்ச்சியால் சிலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நல்ல தொழில் அமைய உள்ளது.
ரிஷபம்:
இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்கார்களுக்கு, உங்க ராசிக்கு சாதகமான இடத்திற்கு ராகு கேது வந்திருக்கிறார்கள். இதனால், எதிர்பாராத யோகம் கிடைக்கும். பண வரவு வரும். சுப காரியங்கள் தடைகளின்றி சந்தோஷமாக நடைபெறும்.
மிதுனம்:
இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு தொழில் ஸ்தானத்திற்கு மாற உள்ளார். இதனால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்க உள்ளது. கடன் சுமை குறைய உள்ளது. வீடு, சொத்து வாங்கும் யோகம் உள்ளது. முதலாளியாக கூட மாறும் யோகம் உள்ளது.
கடகம்:
இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு பாக்ய ஸ்தானத்திற்கு ராகுவும் முயற்சி ஸ்தானத்திற்கு கேதுவும் வருகிறார்கள். இதனால், கடக ராசிக்காரர்களுக்கு விமோசனம் கிடைக்க உள்ளது. வேலைகளில் இடையூறு நீங்க உள்ளது. எதிர்ப்புகளும் விலக உள்ளது. புத்திர பாக்கியமும் கிடைக்க உள்ளது. நினைத்த காரியம் சுமூகமாக முடிய உள்ளது.
சிம்மம்:
இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு, யோகத்தையும் பெருமையையும் கொடுக்க உள்ளது. எதிர்ப்பாராத பணம், சொத்து, தங்கம் வாங்கும் வசதி வரப் போகிறது. எல்லா கடன் பிரச்சினைகள் நீங்க உள்ளது. வீடு கட்டும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் முன்னேற்றம் வர உள்ளது.
கன்னி:
இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு, கேதுவும் 7ம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள். இதனால், கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். கௌரவம், புகழ் பெருக போகிறது. சிலருக்கு வேலை கிடைக்கும் யோகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி கொடுக்கும். கன்னி ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைதோறும் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள்.
துலாம்:
இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களிடமிருந்து கேது விலக உள்ளார். 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு வருகிறார். இதனால், கடன் செலவு குறையும். நோய் விலகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம் கை கூடி வரும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடும். செவ்வாய்கிழமைதோறும் ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள்.
விருச்சிகம்:
இந்த ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு, 6ம் வீட்டில் இருந்த ராகு 5ம் இடத்திற்கும், 12ம் வீட்டில் இருந்த கேது 11ம் இடத்திற்கும் வர உள்ளார். இதனால், நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தெர உள்ளார். தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும். சொத்து, வீடுகள் வாங்வீர்கள். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கும்.
தனுசு:
இந்த ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு, 4ம் பாவத்திக்கு ராகு வர உள்ளார். இதனால், காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். செலவுகள் உண்டாகலாம் பழைய கடன்கள் அடையும். தொழில் நிலை முன்னேற்றம் அடையும். சனிக்கிழமை ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். நன்மை கிடைக்கும்.
மகரம்:
இந்த ஆண்டு மகரம் ராசிக்காரர்களுக்கு, 4ம் இடத்தில் இருந்த ராகு 3ம் இடத்திலும், 10 இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் வர உள்ளார். இதனால், புது முயற்சிகள் யாவும் வெற்றி பெற உள்ளது. ஏளனம் செய்தவர்கள் உங்களை வியந்து பார்க்கப்போகிறார்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் தீரும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்க உள்ளது. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள்.
கும்பம்:
இந்த ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு, ராகுவும் கேது உங்க ராசிக்கு ஆயுள் ஸ்தானத்திற்கும் வருவது சிறப்பாக இருக்கப்போகிறது. இதனால், திடீர் அதிர்ஷ்டங்கள் வர உள்ளது. வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற கோபம், வெறுப்பு உணர்வுகளை கட்டுப்படுத்திவிடுங்கள். பண விவகாரங்களில் மாட்டிக்கொள்ள வேண்டாம். ராகு காலத்தில் ராகு கேதுவிற்கு அர்ச்சனை செய்யுங்கள். நல்லது நடக்கும்.
மீனம்:
இந்த ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு, 18 ஆண்டுகளுக்கு பிறகு ஜென்ம ராசியில் ராகு வருகிறார். இதனால், 7ம் வீட்டில் கேது இனி 18 மாதங்கள் உங்க ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால், பண வருமானம் வர உள்ளது. வேலையில் திடீர் இடமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும். வேலைகளில் கவனமாகவும் விழிப்புணர்வோடு இருங்கள். செவ்வாய்கிழமை ராகு காலத்தில் விளக்கு ஏற்றுங்கள்.